Description
அருணகிரி
வோட்டுப் போடுவது மட்டும்தான் இன்று நமக்குத் தெரிந்த அதிகபட்ச அரசியல் பங்களிப்பு. அரசியல் மைதானத்தில் தலைவர்களும், அவர்களின் அடிவருடிகளும் மட்டுமே விளையாடத்தக்கவர்கள் என்று எண்ணுவதால் பலரும் அரசியல் மீது அதிகம் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார்கள். ‘கட்சிகள் உருவான கதை’என்ற இந்த நூலை, இந்திய அரசியல் கட்சிகளைப் பற்றிய அருமையான தொகுப்பாகத் தந்திருக்கிறார் அருணகிரி. இவர் எழுதியிருக்கும் ஆக்கபூர்வ _ தேடுதல் மிகுந்த _ படிக்கிற போதே மனதில் நம்பிக்கையைத் துளிர்க்க வைக்கிற, அரசியல் உலகின் போராட்டகர விஷயங்கள், அரசியலை விட்டு விலகி நிற்க நினைக்கிறவர்களைக்கூட உள்ளே இழுக்கும். மாணவ சமுதாய எழுச்சி மூலம் உருவெடுத்த ‘அஸ்ஸாம் கணபரிஷத்ஒ, பழங்குடியினரது மேம்பாட்டுக்காக கிளர்ந்தெழுந்த ‘ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா’, ஆக்ரோஷத்தால் அவதரித்த மம்தா பானர்ஜியின் ‘திரிணாமூல் காங்கிரஸ்’ என ஒவ்வொரு கட்சியும் உருவான கதையை விவரமாகவும் விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். மத்தியில் எத்தகைய ஆட்சி அமையும் என்பதை தீர்மானிக்கக் கூடிய சக்திகளாக இருக்கும் தேசியக் கட்சிகள் பற்றியும், நாட்டை ஆளத்தக்க காங்கிரஸ், பாரதிய
ரூ.65/-
Reviews
There are no reviews yet.