Description
டாக்டர் . மோகன் ராஜன்,சுஜாதா மோகன்
உயிரின் ஒளி கண்… சாதாரண தலைவலி காய்ச்சல் முதற்கொண்டு எந்த நோய்க்கும் சித்தா, ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம், அக்குபஞ்சர், அலோபதி என எந்த மருத்துவரைப் பார்த்தாலும் முதலில் கண்ணைத்தான் சோதிக்கிறார்கள். கண்ணை மட்டுமே சோதித்து அதன் மூலம் உடல் பிரச்னைகளை ஆராய்ந்து சிகிச்சை அளிக்கும் இரிடாலஜி ஒரு தனி மருத்துவத் துறை. இன்றைய சூழலில் இயற்கையிலிருந்து அந்நியப்பட்ட நச்சுத்தன்மை வாய்ந்த உணவையே நாம் சாப்பிட வேண்டியிருப்பதால் கண் சார்ந்த பிரச்னையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இத்துடன் கண்ணுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுதல், அதிக வெளிச்சம் நிரம்பிய சூழலில் நீண்ட நேரம் இருப்பது, கணினித் திரையை நீண்ட நேரம் உற்றுப் பார்ப்பது, ஆகியவை நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாததாகிவிட்டது. எனவே இவை சார்ந்த கண் பாதிப்புகள் யாருக்கும் எந்த நேரத்திலும் நேரலாம். எந்தெந்த அறிகுறிகள் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும், அதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன, அவற்றுக்கான மருத்துவத் தீர்வு என்ன, எப்படிப்பட்ட வாய்ப்பை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது போன்ற நுணுக்கமான அம்சங்களை மிகுந்த அக்கறையுடனும் எளிதில் புரியும்படியாகவும் தங்கள் கள அனுபவத்துடன் எழுதியுள்ளனர் டாக்டர்கள் பேரா. மோகன் ராஜன் மற்றும் சுஜாதா மோகன். கண் நலம் சார்ந்த நூல் என்பதால் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களையும் கடந்து புதிய வாசகர்களையும் சென்றடையும் பயனுள்ள நூல் இது என்று நம்புகிறோம்.
ரூ.90/-
Reviews
There are no reviews yet.