Description
பாரததேவி
ஏட்டறிவற்ற ஏழைகளிடத்தும், பட்டறிவுமிக்க பாமரர்களிடத்தும் தங்கள் வாழ்வுகுறித்த கதைகளும் நேசங்களும் ஏமாற்றங்களும் சோகங்களும் வாய்மொழியாகவும், செவிவழிச் செய்திகளாவும் மிகுதியாக விரவிக்கிடக்கின்றன. இப்படிப்பட்ட மனிதர்களின் வாழ்வனுபவங்களைத் தம் எழுத்தில் உலவவிட்ட எழுத்தாளர்களின் தொடர்ச்சியாக நம் கவனத்துக்கு வருபவர் எழுத்தாளர் பாரததேவி. பால்ய காலத்திலிருந்தே கதைகளைக் கேட்டு வளர்ந்திருக்கும் பாரததேவி தன் கதைகளின் ஊற்றுக்கண்ணாக தான் வாழ்ந்துவரும் கிராமத்தைக் குறிப்பிடுகிறார். அங்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிலவிவரும் நேசத்தின் தட்பவெப்பத்தை மட்டும் எடுத்துக்கொண்டு ‘அவள் விகடன்’ வழியாக வாசகர்களுக்குச் சொல்லிய காதல் கதைகளின் தொகுப்புதான் இந்தப் புத்தகம். தன் புத்திசாலித்தனத்தால் இளவரசனை மணமுடிக்கும் மரகதத்தையும், பெற்றவள் தன் மீது வைத்த நம்பிக்கைக்காக உற்றக் காதலைத் துறக்கும் பூமணியையும், பணத்தைக் காரணம் காட்டி காதலை கைக்கழுவிய காதலனுக்கு பாடம் புகட்டும் கஸ்தூரியையும் பாரததேவியின் கதையுலகத்தில் காணமுடிகிறது. அதே நேரத்தில் வரம்புமீறி ஆசைப்படும் வைராண்டி கதாபாத்திரமும், பிரசவத்துக்கு
ரூ.45/-
Reviews
There are no reviews yet.