கருணாநிதி புகைப்பட ஆல்பம்

250.00

“தென்றலைத் தீண்டியதில்லை. ஆனால், தீயைத் தாண்டி இருக்கிறேன்!” என்பது, ஒரு திரைப்படத்துக்கு கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம். “எனது வாழ்நாளில் மகிழ்ச்சி, அதிக நேரம் நீடிப்பதில்லை!” என்பதும் அவர் ஒரு மேடையில் சொன்னதுதான். ‘தமிழகத்தின் ஆட்சிச் சக்கரத்தை ஐந்து முறை பிடித்தவர்’ என்று ஒற்றை வரியில் சொல்லிவிடலாம். ஆனால், இந்த அரசியல் பயணத்தில் எத்தனை மேடுகள், பள்ளங்கள், நெளிவு சுழிவுகள் என்பதைப் பட்டியலிட்டுப் பார்த்தால்… ஒரு தனிமனிதன், இத்தனைச் சோதனைகளையும் தாண்டி சுறுசுறுப்பாக, உற்சாகத்தோடு வாழ முடியும் என்பதற்கு உதாரணமாக கலைஞரின் வாழ்க்கையைச் சொல்லலாம்! எழுத்து, பேச்சு, திரைப்படம், அரசியல், இலக்கியம்… என அவர் தொடாத துறை இல்லை; தொட்டால் துலங்காத துறையும் இல்லை என்பதை, தனது வாழ்க்கை மூலமாக நிரூபித்துக் காட்டியவர் கலைஞர். பள்ளிப் பாலகனாக ‘டென்னிஸ் பேட்’ ஏந்தி நின்று கொண்டிருக்கும் கலைஞரின் அரசியல் பயண விளையாட்டு, 80 வயது கடந்த பிறகும் தொடர்வதற்கு அவரது தளராத உழைப்பு மட்டுமே காரணம். உடல் சோர்ந்தாலும் உள்ளம் சோர்வடையவில்லை. முதுமை தொட்டாலும் மூளை தளரவில்லை. இந்தப் புகைப்படத் தொகுப்பில் மூழ்குவதன் மூலம், ‘கலைஞர்’ என்கிற தனிமனிதரை உணர்ந்து கொள்வது மட்டுமல்ல… ‘உழைப்பே உயர்வு’ என்ற உன்னதத் தத்துவத்தையும் உணர முடிகிறது! கலைஞர் கடந்து வந்த பாதையில் எத்தனையோ மைல் கற்கள். அவற்றையெல்லாம் ஒன்றுசேர்த்து எழுப்பப்பட்டுள்ள புகழாலயமே இந்தப் புத்தகம். உற்சாகத்துடன் உள்ளே நுழையுங்கள்… மேலும் புத்துணர்ச்சி பெறுவீர்கள்!

Categories: , , Tags: , ,
   
Description

விகடன் பிரசுரம்

ரூ.250/-

Additional information

Weight 0.401 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “கருணாநிதி புகைப்பட ஆல்பம்”

Your email address will not be published. Required fields are marked *