Description
கரைந்த நிழல்கள்’ நாவலில் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒரு முன்மாதிரி உண்டு. ஆனால் அந்தப் பாத்திரங்கள்தான் அந்த முன்மாதிரியல்ல. அதாவது பல தகவல்களில் பாத்திரங்களும் முன்மாதிரிகளும் பெரிதும் மாறுபட்டு இருக்கும். பல படமுதலாளிகளின் கலவை ரெட்டியார். அதேபோல பல ஸ்டுடியோ முதலாளிகளின் கலவை ராம ஐயங்கார். பல புரொடக்ஷன் மானேஜர்களின் கலவை நடராஜன். ஆனால் இந்த நாவலில் அந்த ஸ்டுடியோவும் சினிமாவும் அவ்வளவு முக்கியமல்ல. இது மனிதர்களைப் பற்றியது. உண்மையாக இருக்கக்கூடிய மனிதர்களைப் பற்றி ஓர் அந்தரங்கத்தோடு ஓர் உரிமையோடு எழுதப்பட்டது என்பதுதான் முக்கியம். பிற்காலத்தில் இது ஒரு நல்ல நாவல் என்றில்லாமல் இது சினிமாத் துறை பற்றிய ஒரு நல்ல நாவல் என்று கூறப்படுமானால் நான் தோல்வியடைந்தவனாவேன்.
அசோகமித்திரன்
Reviews
There are no reviews yet.