Description
சுகிர்தராணி
சுகிர்தராணியின் காமத்திப்பூ கவிதைத்தொகுதியை நேற்று புத்தகவெளியீட்டில் வாங்கினேன். சற்று குறைந்த விலையில் ஐம்பது கவிதைகளைத் தாங்கியிருக்கும் அருமையான பதிப்பு.
வார்த்தைகளின் பிரயோகங்களும் சிந்தனையின் ஆழமும் அருமையாயிருக்கிறது. அவ்வப்போது ஆங்காங்கு அவரது கவிதைகளைப் படித்திருந்தாலும் தொகுதியாய் அவரது கவிதைகளைப் படிப்பது இது முதல் முறை.
இரண்டு மீன்களும் ஐந்து அப்பங்களும் என்ற கவிதையில் காதலையும் காமத்தையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். (பெருமழையில் நனைந்த பறவையின் கண்களை ஒத்திருக்கிறது உன் பார்வை- எத்தனை அழகிய வர்ணிப்பு.)
கொலையுண்டவனின் பொருட்டாவது
பொத்தலிடப்பட்ட அவன் சடலத்தைச்
சிறிது கருணையுடன் நடத்தியிருக்கலாம். (நீ ஒரு கொலை நிகழ்த்தினாய்)
கவிதை வளரவேண்டுமென்றால் நல்லது கவிஞர்களை ஊக்குவித்து பக்கபலமாக நிற்றல் வேண்டும். ஒரு காபி குடிக்கும் (இரண்டு பேர்) செலவையோ அல்லது மட்டமான ஒரு திரைப்படத்தையோ தவிர்த்து கவிதை நுாலை வாங்கினால் நல்ல கவிதைகளை ஆதரிப்போம்
– அன்புசிவம்
ரூ.100/-
Reviews
There are no reviews yet.