Description
சுவாமி சித்தானந்தா
உணவே மருந்து; மருந்தே உணவு என்பார்கள். நாம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே, நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கான மருந்தையும் சேர்த்து சமைத்தார்கள். மருந்துப் பொருள்களாக வகைப்படுத்தப்பட்ட பல மூலிகைகள், உணவுப் பொருள்களாகவும் நம் வீட்டு சமையலறைகளை ஆக்கிரமித்ததுண்டு. ஆனால் இன்றைய நிலை தலைகீழ்! மனிதர்களை நோய்களின் தொல்லையிலிருந்து காக்க சிவபிரான் அருளிய மருத்துவ முறையாகக் கருதப்படுவது ‘சித்த மருத்துவம்’. மகாவிஷ்ணுவின் அவதாரமான பகவான் தன்வந்திரி அருளியதாகக் கருதப்படும் மருத்துவ முறை ‘ஆயுர்வேதம்’. இவற்றின் கலவையாக உருவானதுதான் பாட்டி வைத்தியம் என்ற நம் பாரம்பரிய வைத்தியம். சாதாரணமான தலைவலி, உடல் வலி என்றாலே பலரும் நாடுவது ஆங்கில மருந்து மாத்திரைகளை. ஆனால் மேலைநாடுகளிலோ மக்கள் அதிகம் விரும்புவது மூலிகைப் பொருட்களாம்! அங்கே நம் சித்த, ஆயுர்வேத மருத்துவப் பொருட்களின் விற்பனை அதிகரித்து வருகிறதாம். சில ஆங்கில மருந்துப் பொருட்களே, மூலிகைகளிலிருந்து வேதி முறைப்படி தயாரிக்கப்படுகின்றன. ஒன்றுமில்லாத பிரச்னைக்குக்கூட ஓராயிரம் மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களை, மருந்து அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும் ஆலோ
ரூ.90/-
Reviews
There are no reviews yet.