Description
டாக்டர் பா.மாதவ சோமசுந்தரம்
ஒரு குற்றம் நிகழும் போது அதை செய்தியாக வாசிக்கும் நாம் முதலில் லேசாக அதிர்ச்சி அடைவோம். சிறிது நேரம் வருத்தப்படுவோம். பிறகு, ஒரு கோப்பை தேநீர் குடித்துவிட்டு நமது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவோம். கோர்ட்டில் வழக்கு நடக்கும். சிறிது காலம் கழித்து தீர்ப்பு வரும். குற்றவாளி சிறைக்குச் செல்வார் அல்லது அபராதம் கட்டி வெளியே வருவார். வழக்கறிஞர்கள் அடுத்த கேஸ் கட்டை தூசி தட்டி எடுக்கப் போய்விடுவார்கள். காவலர்கள் லத்தியைச் சுழற்றியபடி அடுத்த குற்றவாளியைத் தேடிப் போய்விடுவார்கள். ஆனால், இந்தக் குற்ற நிகழ்வுக்கு இன்னொரு இருண்ட பக்கம் உண்டு. யாரும் இதுவரை எட்டிப் பார்த்திராத பக்கம்! அங்கு குற்றத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் கண்ணீர் விட்டபடி கதறிக் கொண்டிருப்பார். இத்தனைக்கும் அவர் எந்தக் குற்றமும் செய்திருக்கமாட்டார்! ஒரு திருட்டு நடக்கிறதா? பெரும்பாலான நேரங்களில் போனது போனதுதான். அபூர்வமாக சில நேரங்களில் திருட்டு போன பொருளை தேடிப் பிடித்துக் கொடுப்பார்கள். ஆனால், பொருளை இழந்ததால் அந்த நபர், மன உளைச்சல், வேதனை, தவற விட்ட வாய்ப்புகள் என எண்ணற்ற துயரங்களை அனுபவித்திருப்பார். அதற்கு எந்த நாட்டுச்
ரூ.60/-
Reviews
There are no reviews yet.