கூண்டு

250.00

கூண்டு : இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும்

ஆசிரியர்: கார்டன் வைஸ், தமிழில்: கானகன்            விலை ரூ. 250

இலங்கையில் விடுதலைப் புலிகளை அழித்கிறோம் என்ற பெயரில் சிங்கள ராணுவம் தமிழ் மக்களையும் சேர்த்து அழித்த அந்தக் காலத்தில் (2007-2009) ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொடர்பு அதிகாரியாக இலங்கையில் பணிபுரிந்த கார்டன் வைஸ் எழுதிய நூல் இது. பத்திரிகையாளர் கானகன் மொழிபெயர்ப்பு.
யுத்த காலத்தில் அங்கு நடைபெற்ற மனித உரிமை மீறல்களை செயற்கைக்கோள் உதவியுடன் எடுக்கப்பட்ட படங்களைக் கொண்டு பல ஆதாரங்களைத் திரட்டிக் கொடுத்தவர் இவர்.
இப்போது ஆஸ்திரேலியாவில் பாதுகாப்புத் துறையில் பணியாற்றி வரும் கார்டன் வைஸ், இதற்கு முன் உலகின் பல பகுதிகளில் இலங்கையைப் போல உள்நாட்டுப் போரைச் சந்தித்த நாடுகளை உற்றுநோக்கியவர் என்பது அவருடைய எழுத்தின் மூலம் தெரியவருகிறது.
உள்ளூர் ஏடுகள், வெளிநாட்டு ஏடுகள், தொலைக்காட்சிகளில் வெளியான பதிவுகளை ஆதாரங்களாக இந்த நூலில் விளக்குகிறது. அரசுத் தரப்பின் மீறல்களை வெட்டவெளிச்சமாக்கும் கார்டன் வைஸ், விடுதலைப் புலிகளின் மீறல்களையும் குறிப்பிடத் தயங்கவில்லை.
அதேநேரத்தில், நெருக்கடி முற்றிய காலத்தில் அரசுத் தரப்பிலிருந்து ஏற்பாடு செய்யப்பட்ட புலிகளுக்கு எதிரான பிரசாரங்கள் மிக மோசமானவை என்றும் பதிவு செய்கிறார் கார்டன் வைஸ். ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்ட பதிவுகளும் இந்த நூலில் உள்ளன.
போரில்லா பகுதிகள் என்று ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு ஆதரவு தேடி ஓடிய தமிழ்ப் பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
குழந்தைகள் இல்லமாக இருந்த செஞ்சோலையில் ராணுவம் குண்டுகளை வீசிக் கொன்ற சம்பவத்துக்குப் பிறகு, அங்கு ராணுவப் பயிற்சி நடந்ததற்கான எந்தத் தடயமும் இல்லை என்பதைத் தெரிவித்ததையும், அதற்கு அரசிடமிருந்து எந்த மறுப்பும் வெளியாகவில்லை என்பதையும் பதிவு செய்திருக்கிறார்.
இப்படிப் பல சம்பவங்கள், தேதி குறிப்பிட்டு, இடம் குறிப்பிட்டு, அது குறித்த விமர்சனங்கள் கூறியவர்களின் பெயர்களுடன் இந்த நூலில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.

Categories: , , , Tags: , , ,
   
Description

கானகன்

ரூ.250/-

Additional information

Weight 0.401 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “கூண்டு”

Your email address will not be published. Required fields are marked *