கைகொடுக்கும் கிராஃப்ட்

195.00

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்கிற முன்னோர் மொழி, இன்றும் கைகளால் புனையும் கைவினை கலைஞர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். பொறுமை, கற்பனை, முதலீடு, நேரம் என இவற்றைச் சார்ந்து உருவாக்கப்படும் இவ்வகை கலைப் பொருட்களுக்கு தொழில் ரீதியாகவும் நல்ல வரவேற்பு உள்ளது. ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்கிறபடி ‘வேண்டாம்’ என நினைக்கும் பொருட்களைக் கூட அழகிய வடிவம் கொடுத்து கற்பனைக்கேற்ற நல்ல உருவங்களை உருவாக்க முடியும் என்பதற்கு இந்நூல் ஓர் உதாரணம். காலப்போக்கில் கிராஃப்ட் என்கிற கைவினைப் பொருட்களை உருவாக்குவதற்கென புனையப்பட்ட மினி கருவிகள் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. கிளிஞ்சல்கள், ஐஸ் குச்சி, வண்ணக் காகிதங்கள், ரிப்பன், க்ளே, மணிகள், துண்டு கண்ணாடிகள், தெர்மாகோல், க்ளூ ஸ்டிக், ஊசி, கோல்டன் ரிப்பன், பிளாஸ்டிக் பூக்கள் என பல வித்தியாசமான பொருட்கள் இந்த கைவினை கலைப் பொருட்களை உருவாக்குவதில் இடம்பிடித்திருக்கின்றன. வீட்டிலிருக்கும் பெண்கள் தங்கள் நேரத்தைப் பயனுற செலவழிக்க இது ஓரு நல்ல தொழில் மாத்திரம் அல்ல… தங்களின் திறமையை வெளிப்படுத்தக்கூடிய விதத்தில் அமையும் உத்தியும்கூட. இந்த வடிவங்கள் பூந்தொட்டிகள், வால் ஹாங்கர், கிஃப்ட் பாக்ஸ், கலர் லைட்ஸ், பென் ஸ்டாண்ட், வேக்ஸ் பொருட்கள், அலங்கார தோரணம், ஆபரணங்களான நெக்லஸ் – தோடு – பிரேஸ்லெட் மற்றும் ஊதுபத்தி ஸ்டாண்ட், தலையணை ஆகிய வடிவங்களை உருவாக்குவதில் கைதேர்ந்த, அனுபவமுள்ள கைவினைக் கலைஞர்களைக் கண்டெடுத்து அவர்களது திறமையையும் முன்னேற்றங்களையும் வரிசைப்படுத்தியிருக்கிறார் நூல் ஆசிரியர் வே.கிருஷ்ணவேணி. இவை கிராஃப்டில் ஆர்வமுள்ளவர்களின் கற்பனைக்கு நல்ல விருந்தாகும். ஆர்வமுள்ளவர்கள் நிச்சயம் தங்கள் கற்பனைக்கேற்ற விதத்தில் உருவாக்கும் கிராஃப்ட்களை விற்பனைக்கும் கொடுக்க முடியும். தங்களின் ஆக்கத்திற்கு ஏற்ப விற்பனை விலையையும் அதிகரித்துக்கொள்ளலாம். குறைந்த நேர உழைப்பில் குறைந்த செலவில் நிறைந்த லாபத்தைப் பெறமுடியும் என்கிற நம்பிக்கையைக் கொடுத்திருப்பது இந்த நூலின் சிறப்பம்சமாகும். அவள் விகடனில் 4 ஆண்டுகளுக்கு மேல் தொடராக வெளிவந்த ‘கைகொடுக்கும் கிராஃப்ட்’ பகுதி மொத்த தொகுப்பாக நூலாக்கம் பெற்று இதோ உங்கள் கைகளில்… வாருங்கள்… நீங்களும் கைவினைக் கலைஞர்களாகிட கைகொடுக்கிறது இந்த கிராஃப்ட்… உங்கள் திறமைக்கேற்ற விதத்தில் உருவாக்கும் உத்தியைக் கற்று, படைத்து, விற்பனை செய்யுங்கள்… முன்னேறுங்கள்!

Description

வே.கிருஷ்ணவேணி

ரூ.195/-

Additional information

Weight 0.301 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “கைகொடுக்கும் கிராஃப்ட்”

Your email address will not be published. Required fields are marked *