Description
எம்.ஏ.ஜவஹர்
சமூகத்தில் நடைபெறும் சில தவறுகளுக்கு, தெரிந்தோ தெரியாமலோ நாமும் ஏதோ ஒரு விதத்தில் காரணமாக இருக்கிறோம். ஒரு தவறு நம் கண்முன்னே நடைபெறும்போது அது நம்மை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை எனில், நாம் சமூகத்தைவிட்டு ரொம்ப தூரம் விலகி வந்துவிட்டோம் என்றுதான் பொருள். அச்செயலுக்காக குறைந்தபட்சம் நம் எதிர்ப்பைக்கூட காட்டாதபோது, இச்சமூகத்திலிருந்து நாம் ஏதும் பெறுவதற்கு உரிமை இல்லாதவராகி விடுகிறோம். சிலருக்கு சமூக அவலங்களுக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அடிக்கடி துறுத்திக்கொண்டு மேலெழும். ஆனாலும், சிலர்தான் இதனைத் துணிந்து செய்கிறார்கள். அந்த சிலரில் ஒருவர்தான் இந்நூலாசிரியர் எம்.ஏ.ஜவஹர். இந்நூலில் உள்ள அனைத்துக் கட்டுரைகளும் ஜூனியர் விகடனில் தொடராக வெளிவந்தவை. கட்டுரைகள் அனைத்தும் மத்திய&மாநில அரசுகளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட கணைகள். மத்திய_மாநில அரசுகளின் செயல்பாடுகள்மீது சுமத்தப்படும் இக்குற்றச்சாட்டுகள் அவர்களே மறுக்க முடியாத அளவுக்கு தர்கரீதியாக உள்ளன. உதாரணமாக, நல்ல லாபத்தில் இயங்கிவந்த பி.எஸ்.என்.எல். தொலைபேசி நிறுவனம் பின்னுக்குத் தள்ளப்பட்டதையும், நட்டத்தில் இயங்கிவந்த இ
ரூ.80/-
Reviews
There are no reviews yet.