Description
பச்சரிசி மாவில் புள்ளிவைத்து, இழை இழையாக நாம் போடும் கோலம், நமது கலாசார அடையாளங்களில் ஒன்று. அதிலும் மார்கழி மாதம் என்றால் அந்தக் கோலங்களின் மெருகும் போடுபவரின் உற்சாகமும் இன்னும் பல படிகள் அதிகரிக்கும். இருள் பிரியாத முன்பனிக் காலையில் எழுந்து போட்டி போட்டுக்கொண்டு, வீட்டுக்கு வீடு வண்ணப் பொடிகளால் வாசலில் ஒரு வானவில் ஜமுக்காளத்தையே விரித்துவிடுவார்கள். தினந்தோறும் நம் இல்லங்களின் முகப்பை அலங்கரிக்கும் கோலங்களுக்கு இன்னும் பல சிறப்புகளும் உண்டு. வீட்டுக்கு அழகும் மங்கலமும் தருகின்றன என்பதோடு, வேண்டாத எண்ணங்களை நீக்கி, மனதை ஒருமுகப்படுத்தும் சக்தியும் கோலத்துக்கு உண்டு. புள்ளிக்கோலம், நெளிகோலம், கோட்டு கோலம், இழைக்கோலம், ரங்கோலி என்று எத்தனை வகைகள்! அத்தனை வகைகளிலும் பெண்கள் தங்கள் படைப்பாற்றலையும் கற்பனைத்திறனையும் வெளிப்படுத்த உதவும் மகத்தான கலையல்லவா கோலம்! அந்தக் கலையில் நீங்கள் கைதேர்ந்தவர்கள் என்று எங்களுக்கு தெரியும். இருந்தாலுமே, உங்களுக்கு மேலும் மேலும், பலவித டிஸைன்களில் புள்ளிக் கோலங்களையும், ரங்கோலி கோலங்களையும் விதம்விதமாக அள்ளித்தந்திருக்கிறோம். ‘கோலங்கள்’ தொல
ரூ.60/-
Reviews
There are no reviews yet.