Description
நீதிபதி கே.சந்துரு
நீதிமன்றம், ஜனநாயகத்தின் முக்கியமான தூண். அறச் சிந்தனையும் மனிதாபிமானமும் அருகிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், சாமானியன், முதலும் கடைசியுமாக நம்புவது நீதிமன்றங்களைத்தான். சட்டத்தின் கீழ் அனைவரும் சமம் என்ற நியதியை நீதிமன்றங்கள்தான் இன்று வரை நிலைநிறுத்திக்கொண்டுள்ளன. பல்வேறு சந்தர்ப்பங்களில் பல வழக்குகளை தாமே முன்வந்து எடுத்துக்கொண்டு நீதி வழங்கி இருக்கின்றன நீதிமன்றங்கள். பாதிக்கப்படும் எவரும் நீதிமன்றத்தின் துணையோடு, சட்டத்தால் யுத்தம் செய்து, வெற்றிபெறலாம் என்பதைக் கூறுகிறது இந்த நூல். நீதிபதி சந்துரு பல வழக்குகளில் அதிரடியான தீர்ப்பு வழங்கி, சட்டத்தின் மாண்பைக் காத்து, மக்கள் மனதில் நின்றவர். அப்படி, தான் சந்தித்த வழக்குகள் பற்றியும், பிற வழக்குகள் பற்றியும், அவள் விகடனிலும், கல்கி இதழிலும் எழுதிய தொடர் கட்டுரைகள் இப்போது நூலாகியிருக்கிறது. கும்பகோணத்தில் மூதாட்டி ஒருவர், தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஒரு சின்ன போஸ்ட் கார்டில் நீதிமன்றத்துக்கு அனுப்பியதை ஏற்றுக்கொண்டு அந்த மூதாட்டிக்கு நியாயம் கிடைக்கச் செய்தது மதுரை உயர்நீதிமன்றக் கிளை… இதுபோன்ற பல வழக்குகள் பற்றி விவரித்திருக்கிறார் நீதிபதி சந்துரு. நீதிமன்றத்தை அணுக முடியாமல் அல்லது அணுக பயந்துகிடக்கும் சாமானியர்களின் தயக்கத்தைப் போக்கி, மக்களுக்காகவே சட்டம் என்பதை ஆணித்தரமாக எடுத்துச் சொல்லும் நூல் இது!
ரூ.115/-
Reviews
There are no reviews yet.