Description
தமிழ் வாசகர்களுக்கு ஓரளவு அறிமுகமாகியிருக்கும் எட்கர் ஆலன் போ, வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ், மல்லார்மே, போரிஸ் பாஸ்டர்நாக் முதலான உலகப் படைப்பாளர்களோடு, ஆஸ்திரேலியக் கவி ஏ. டி. ஹோப், ஆப்பிரிக்கக் கவி அமில்கர் கப்ரல், சீனக் கவி ஸி சுஅன், ஜப்பானியக் கவி டோஸிமி ஹோரியுஷி, மராட்டிய பௌத்தக் கவி பஹ்வான் ஷவை முதலான பல முக்கியப் படைப்பாளிகளின் கவிதைகள் புத்தகத்துக்கு அடர்த்தியும் மதிப்பையும் கூட்டுகின்றன.
கால சுப்ரமணியம் மொழிபெயர்ப்புக்கு எடுத்துக்கொள்ளும் கவிஞருக்கு மிகுந்த விசுவாசமாக இருப்பவர். கவிதைகளை மிக நெருக்கமாக அறிந்த பிறகே அவற்றைப் பொருட்சிதறல் இல்லாமல் மொழியாக்கம் செய்திருக்கிறார் என்பதை அடுத்து வரும் கவிதைப் பக்கங்கள் உறுதி கூறும். புகழ் மிக்க போதலேர் கவிதைகளும், கிறித்துவுக்குச் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் பிறந்த கிரேக்கக் கவி பல வகைகளில் முதல்வி என்று சொல்லத்தகும் ஸாப்போவின் கவிதைகளும் இத்தொகுப்பின் சிறப்பம்சங்கள் ஆகும்.
Reviews
There are no reviews yet.