Description
முதலில் ஒரு கதை சொல்வதுபோல் தொடங்குகிறது கந்தசாமியின் உரைநடை. காலதாமதமே செய்யாமல் வனம் அழிப்புப் பகுதி வந்தடைந்தவுடன், ரசம் மிகுந்த நீண்ட கவிதையாக உருமாறுகிறது. வனத்தை அழிப்பதை ‘மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே நிகழும் போர்’ என்றும்; ஆலை நிறுவுவதை ‘பழைய காலத்தை இடித்துத் தள்ளி வரும் நவீன காலம்’ என்றும் சம்பிரதாயமாக, திரும்பத் திரும்பச் சலிப்பு தரும் உருவகங்களாகக் கந்தசாமி கொள்ளவில்லை. மாறாக, யதார்த்தத்தையொட்டி வாழ்க்கையில் யாரும் எதிர்கொள்ளக்கூடிய சம்பவங்களாக நோக்கும் ஒரு பக்குவம் அவருக்கு இருக்கிறது. இந்தப் பக்குவத்தின் அடிப்படையில் ஒவ்வொரு செடியும் கொடியும் மரமும் விழுவதை கால மாற்றத்தின் இசையாக அனுபவிக்கும்படி எழுதப்பட்டு இருக்கிறது.
– அசோகமித்திரன்
Reviews
There are no reviews yet.