Description
சினிமா பாரடைஸோ படம் பார்ப்பதற்குத் தரும் அதே சுவாரஸ்யத்தை அந்தப் படத்தின் திரைக்கதை வசனமும் தருகிறது. பொதுவாகத் திரைக்கதை வசனத்தைப் படத்தின் கதாசிரியர்தான் எழுதுவார். பின்னர் அது பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படும். ஆனால் இது மொழிபெயர்ப்புப் புத்தகமல்ல. படத்தை டிவிடியில் பலமுறை பார்த்து நேரடியாகத் தமிழில் அதன் திரைக்கதை வசனத்தைத் தந்திருக்கிறார் யுகன். இது ஒரு புத்தகத்தை மொழிபெயர்ப்பதைவிடக் கடினமானது. யுகன் நிறைய காலம் உழைத்து இப் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார்.
சினிமா பாரடைஸோ ஏற்கனவே எல்லோராலும் மிகவும் விரும்பப்பட்ட படமாதலால் சரளமாக எவ்வித நெருடலுமின்றி எழுதப்பட்டிருக்கும் அதன் திரைக்கதை வசனமும் நல்ல வரவேற்பினைப் பெறும்.
அம்ஷன் குமார், திரைப்பட இயக்குநர்
Reviews
There are no reviews yet.