Description
கட்டுரையாளர்கள்
தொழிற்சாலைகள் தொடங்குவது, புதிய வியாபாரம் ஆரம்பிப்பது, பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது என்று பிஸினஸின் பல விஷயங்களில், ஆண்களுக்கு நிகராக பெண்களும் தங்கள் பொருளாதார அறிவை வளர்த்துக்கொள்ள ஆர்வம்காட்டி வருகிறார்கள். ‘பெண்கள் வீட்டிலிருந்தபடியே சம்பாதிப்பதற்கு இப்படியெல்லாம் வாய்ப்புகள் இருக்கின்றனவா..?’ என்பதைச் சொல்லும் இந்தக் கட்டுரைத் தொகுப்பு, ‘அவள் விகடன்’ இதழில் வெளிவந்து அமோக வரவேற்பைப் பெற்றது. எந்த ஒரு வெற்றிகரமான பிஸினஸும் சின்ன ஐடியாவில்தான் ஆரம்பமாகிறது. அதற்கு, நம் திறமை என்ன என்பதையும் அதை புத்திசாலித்தனமாக எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் அறிந்துகொண்டால் போதும். பங்குச் சந்தையில் சக்கைப்போடு போடும் இல்லத்தரசியில் ஆரம்பித்து, நர்சரி கார்டனில் நல்ல லாபம் பார்க்கும் இளம் பெண்கள் வரை பலரும் தங்களது புத்திசாலித்தனமான முயற்சியால், ஆண்களுக்கு இணையாக சம்பாதிக்கிற தொழில் வாய்ப்புகளைப் பற்றி இந்தத் தொகுப்பில் பகிர்ந்துகொள்கிறார்கள். ஊறுகாய் தயாரிப்பு முதல் பரஸ்பர நிதி முதலீடு வரை எத்தனையோ சிறந்த ஐடியாக்கள் இங்கே கொட்டிக்கிடக்கின்றன. இந்தச் சின்ன ஐடியாவ
ரூ.80/-
Reviews
There are no reviews yet.