Description
மொஹமத் சலீம்
ஏன் மாமரத்தில் மாங்காய்தான் காய்க்க வேண்டுமா? ஆப்பிள் காய்க்கக் கூடாதா? கோழி ஏன் குட்டி போடுவது இல்லை, ஒட்டகம் ஏன் முட்டை போடுவதில்லை? இவை யெல்லாம் முட்டாள்தனமான கேள்வியாக இருக்கலாம். ஆனால் இவையெல்லாம் மரபியலின் மகத்தான மர்மங்கள். மரபியலைப் பற்றிய ஞானம் வெகு காலத்துக்கு முன்பிருந்தே முன்னோர்களால் கையாண்டிருப்பதும் உண்மையே. இதுதான் ‘மரபியல்’ என்று தெரியாமல். ஆதிகால மனிதன், தன் குழந்தை தன்போலவே இருப் பதைக் கண்டறியும்போது, நாகரிகம், கலாசாரம், பண்பாடு என வளர்ச்சியடையும்போது இதன் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டதன் பிறகே மரபியல் கண்டுபிடிப்பு உருவானது. முதன்முதலில் மரபியல் குறித்த கேள்வியை எழுப்பிய அறிஞர்கள் பலரது ஆராய்ச்சியில் மனிதன் உருவாவதில் ஆண் பெண் இருவரின் சமபங்கு இருக்கிறது. எப்படி ஆண் பெண் இனங்கள் உருவாகிறது? – எனத் தொடங்கிய கண்டுபிடிப்பு, விலங்கினங்கள், தாவர இனங்களிலும் மரபியல் சோதனை மேற்கொள்ளப்பட்டு ஆராய்ச்சியாக மாறி, பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு ஜீன்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆச்சர்யமான தகவல்களை புலனாய்வு செய்து, நமக்குப் பொக்கிஷமாகக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர். சிக்கலான அறிவியல் அடிப்படைகளை எளிய மனிதர்களும் புரிந்துகொள்ளும்படி அமைத்திருப்பது இந்நூலின் சிறப்பம்சமாகும். நான் யார்? எப்படி உருவானேன்? எங்கு உருவாக்கப் பட்டேன்? என்கிற ஒரு மனிதன் யூகிக்க முடியாத ரகசியங்கள் ஜீன்களால்தான். மற்றும் டி.என்.ஏ, குரோமோசோம்களால் நிகழக்கூடிய மாற்றம், அவற்றின் விளைவு, அதன் நுணுக்கமான ஆய்வுகள் என்ன என்று விரிவாக விளக்கியிருப்பது இந்த நூலின் கூடுதல் சிறப்பாகும். மக்களிடையே மரபியல் தொடர்பான விழிப்புஉணர்வு ஏற்படும் நோக்கில், ஜூனியர் விகடனில் வெளியான தொடர் இப்போது நூல் வடிவில் வெளியிடப்படுகிறது.
ரூ.140/-
Reviews
There are no reviews yet.