Description
ஏ.ஆர்.குமார்
வெற்றி என்பது தோல்வி கற்றுத்தந்தது. தோல்விகளில் துவளாமல் தமது விடாமுயற்சியால் பிசினஸில் வெற்றிபெற்று புகழ்பெற்றவர்கள் ஏராளம். பிசினஸ் செய்வதற்கான குணங்களையும், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற தீராத தாகத்தையும் உடையவர்களால் மட்டுமே பிசினஸில் வெற்றிபெற முடிகிறது. போட்டிகளும் புதுமைகளும் பெருகிக்கொண்டே இருக்கும் இந்தக் காலத்தில் புதியவற்றைக் கற்றுக்கொண்டே இருப்பது, பிசினஸ் செய்பவர்களுக்கு முக்கியமானது. ஒவ்வொரு நிமிடமும் நிகழும் மாற்றங்களுக்கு ஏற்ப தம்மைப் புதுப்பித்துக்கொண்டால்தான் அவர்களின் பிசினஸில் தொடர் வெற்றிபெற முடியும். இந்திய அளவிலும் உலக அளவிலும் புகழ்பெற்றுத் திகழ்ந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள், தாங்கள் தொடங்கிய தொழிலில் எப்படி வெற்றிபெற்றார்கள் என்பதையும் அந்தத் தொழில் சாம்ராஜ்ஜியம் தலைமுறைகளாகத் தொடர்வது பற்றியும் கூறும் நூல் இது! இதில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உண்டு. அவர்களின் வெற்றி வரலாறு, நாணயம் விகடனில் `பிசினஸ் சமூகம்’ எனும் தொடராக வெளிவந்தது. இப்போது நூலாகி இருக்கிறது. உங்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்கும் அந்த வெற்றியாளர்களின் வரலாற்றை அறிய… உள்ளே வாருங்கள்
ரூ.140/-
Reviews
There are no reviews yet.