தமிழ்நாட்டில் காந்தி

425.00

இந்திய தேசத்தின் தந்தையாக வலம் வந்தாலும் தன் நெஞ்சத்தில் தமிழ்நாட்டுக்கான தனி இடத்தை தாரை வார்த்தவர் மகாத்மா காந்தி. ‘நான் தமிழ்நாட்டில் பிறக்கவில்லையே’ என்று வருந்தியவர். தமிழ் மொழியின் இலக்கியங்களையும் திருக்குறளையும் படிப்பதற்காக தமிழ் மொழி ஞானம் தனக்கு இல்லையே என்று ஏங்கியவர். தன் வாழ்நாள் முழுவதும் தமிழைக் கற்றவர். தமிழ் கற்றுத்தர ஒருவரை தனது ஆசிரமத்தில் வைத்திருந்தவர். காந்தி இத்தகைய பற்று, பாசத்தை வேறு எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழி மீதும் வைத்திருந்ததில்லை. இத்தகைய உள்ளார்ந்த ஈடுபாட்டின் காரணமாகத்தான் சாதாரண மனிதராக இருந்தபோதும், தேசத் தலைவராக மலர்ந்தபோதும் தொடர்ச்சியாக தமிழ்நாட்டுக்கு வருகை தருவதை மகாத்மா வழக்கமாகவே வைத்திருந்தார். 1896 முதல் 1946 வரை இருபது முறை தமிழ்நாட்டில் அண்ணலின் காலடி பட்டுள்ளது. அவர் ‘மகாத்மா’ எனக் கொண்டாடப்படுவதற்கு முன்னதாகவே தமிழ் மக்கள் அவரை மகானாக தரிசித்தார்கள். அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம். வாழ்த்து மடல்கள் குவிந்தன. கதருக்காகவா, தீண்டாமைக்கு எதிராகவா… எதற்கு நிதி கேட்டாலும் மறுக்காமல் அள்ளிக் கொடுத்தார்கள் தமிழ் மக்கள். காந்தியின் 50 ஆண்டு காலத் தமிழ்நாட்டுப் பயணத்தின் மூலமாக இதன் வரலாற்றை, சமூக சூழ்நிலையை, மக்களின் வாழ்க்கையை, அரசியல் விழிப்பு உணர்வை அறிய முடிகிறது. ஆசிரியர் அ.ராமசாமியின் இந்தப் புத்தகம் வருங்காலத் தலைமுறைக்கு காந்தியையும் தமிழகத்தையும் முழுமையாக உணர்த்தும்!

Categories: , , Tags: , , ,
   
Description

அ.ராமசாமி, பி.ஏ.,

ரூ.425/-

Additional information

Weight 0.711 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “தமிழ்நாட்டில் காந்தி”

Your email address will not be published. Required fields are marked *