Description
பா.முருகானந்தம்
சீனா, ஆரம்பத்தில் கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தியபோது, அது யதார்த்தத்துக்கு இணைந்து வராது என்பதை எப்போதோ கண்டுகொண்டது. ஆனாலும், ‘மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற வீம்பில் அண்டை நாடுகளான இந்தியா, திபெத் முதலிய நாடுகளை சீண்டிப் பார்க்கும் வழக்கம் சீனாவுக்கு உண்டு. இப்படிதான், 1950_களில் திபெத்தை ஆக்கிரமித்துக்கொண்டது சீனா. மொத்தமாக ஆக்கிரமித்துக் கொண்டால் உலக நாடுகள் தன் மீது பாயும் என்று கருதி, திட்டம்போட்டு உள்நாட்டுக் கலகத்தை விளைவித்தது. இதன் காரணமாகவே, திபெத் மக்களுக்கு விடுதலை உணர்வு பொங்கி எழுந்தது. திபெத் நாட்டு மதத் தலைவரும், அரசுத் தலைவருமான இன்றைய தலாய் லாமா அகிம்சை வழியில் போராட ஆரம்பித்தார். சிறுவயதிலேயே அவருக்கு அரசியல் பொறுப்பையும் சுமக்க வேண்டிய நிலை; சீனாவை எதிர்க்கவேண்டிய நிர்பந்தம். எனவே, நாடுவிட்டு ஓடிவந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். உலக நாடுகளின் கவனம் தலாய் லாமாவின் மீது திரும்பியது. சீனா எப்படி திபெத்தை ஆக்கிரமித்தது, தலாய் லாமாக்களை திபெத் எவ்வாறு தேர்ந்தெடுக்கிறது, தற்போதைய தலாய் லாமா எவ்வாறு மதத் தலைவர் பீடத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்
ரூ.85/-
Reviews
There are no reviews yet.