Description
சூலூர் கலைப்பித்தன்
இந்திய சுதந்திரப் போராட்டம் சிப்பாய் கலகத்திலிருந்து தீவிரம் அடைந்தாலும், அதற்கு முன்பே தமிழகத்தில் விடுதலைக்கான விதைகள் தூவப்பட்டன. பூலித்தேவன், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் வரிசையில் தீரன் சின்னமலையும் விடுதலை வேள்வியில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு பிடிக்க வந்த வெள்ளையர்கள், இந்தியாவில் சிதறுண்டு கிடந்த அரசர்களையும் குறுநில மன்னர்களையும் பார்த்து வியாபார வலை வீசினார்கள். வெள்ளையர்கள் சூழ்ச்சி செய்து பின்னால் நம் தேசத்தையே சூறையாடப் போவது தெரியாமல் அரசர்களும் குறுநில மன்னர்களும் அவர்களுக்கு ஆதரவு தந்தனர். அப்படிக் காலடி வைத்த வெள்ளை ஏகாதிபத்யம், இந்தியாவுக்குள் இருக்கிற வியாபாரச் சந்தையைக் கருத்தில் கொண்டு, நம் நாட்டில் இருக்கிற இயற்கைச் செல்வ வளங்களையெல்லாம் தங்கள் நாட்டுக்குக் கொண்டு செல்ல, கிழக்கிந்தியக் கம்பெனியைத் தொடங்கியது. எந்தச் சூதும் அறியாத அப்பாவி இந்தியப் பிரஜைகள் கிழக்கிந்தியக் கம்பெனியிலேயே பணியில் சேர்ந்து, வெள்ளையர்களுக்கு மறைமுகமாக உதவினர். இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்ட வெள்ளையர்கள், ஆக்டோபஸ் போல கொஞ்சம் கொஞ்சமாக நம்மை
ரூ.45/-
Reviews
There are no reviews yet.