Description
ப.திருமாவேலன்
அக்னி நட்சத்திர காய்ச்சலுக்கு இணையாக அனல் வீசிக் கொண்டிருக்கிறது 2009 தேர்தல் களத்தில்! இமயம் முதல் குமரி வரையில், கையில் மைக் பிடித்து, தொண்டை வலிக்கக் குரல் எழுப்பி, வாக்குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டும், எதிர்க்கட்சிகள் மீது புழுதிவாரி இறைத்துக் கொண்டும் இருக்கிறார்கள் அரசியல்வாதிகள்! நாடு தழுவிய வாக்காளர்கள் முகத்தில் மென் புன்னகையுடன் இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்! மே-16 அன்று ஓட்டுகள் எண்ணப்பட்டதும், ஆட்சி அமைக்கும் உரிமை யாருக்கு வசப்படும் என்பதைக் கணிக்க முடியாத நிலை இப்போது! எதுவும் நடக்கலாம்; எப்படியும் நடக்கலாம் என்பதே பொதுவான அபிப்பிராயம்! 2009 தேர்தல் களம் குறித்த கணிப்புகள் மற்றும் ஆருடங்களைத் தவிர்த்து, ஆரம்பத்திலிருந்து இந்திய அரசியலையும், அரசியல் கட்சிகளையும் அலசும் விதமாக உள்ளே எட்டு கட்டுரைகளையும் எளிமையான நடையில் அமைத்திருக்கிறார் நூலாசிரியர் ப.திருமாவேலன். முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவில் ஆரம்பித்து, இன்றைய பிரதமர் மன்மோகன் சிங் வரை இந்தியாவின் பிரதமர்கள் பற்றியும், அவர்கள் அரியணை ஏறிய காலகட்டங்களில் நிலவிய அரசியல் பின்னணிகள் பற்றியும் துல்லியமாகப
ரூ.50/-
Reviews
There are no reviews yet.