Description
கட்டுரையாளர்கள்
வெறுங்கை என்பது மூடத்தனம். விரல்கள் பத்தும்தான் மூலதனம்’ இது சாதாரண வாக்கியம் அல்ல. சாதனையின் சிகரம் தொட்டவர்களின் அனுபவ மொழி. ஒருவரின் கடின உழைப்பு, திட்டமிடல், தேர்ந்தெடுத்த துறையின் மீது காட்டும் ஈடுபாடு இவையே அவரை வெற்றியை நோக்கி நகர்த்தும், உயர்த்தும். பெருகிவரும் மக்கள்தொகையில் எல்லோருக்கும் அரசாங்க வேலையென்பது எட்டாக் கனிதான். அதே நேரத்தில், தன் உழைப்பை நம்பி ஒருவர் சொந்தமாகத் தொழில் தொடங்கி பத்துப் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்போது, அவரை இந்த சமூகம் சாதனை மனிதராக மதிக்கும். சிலருக்கு சுயமாகத் தொழில் தொடங்கும் ஆர்வம் இருக்கும். ஆனால், அதற்கான வழிமுறைகள் தெரியாது. சிலருக்கு தொழில் தொடங்கும் ஆர்வமும், அதற்கான பொருளாதாரப் பின்னணியும் இருக்கும். ஆனால், என்ன தொழில் தொடங்குவது என்ற குழப்பத்துடன் இருப்பார்கள். அப்படியே சுயமாகத் தொழில் தொடங்கினாலும் சரியான திட்டமிடல் இல்லாமல் நஷ்டமடைவோரும் உண்டு. இவர்களில் பெரும்பாலோர் ‘எனக்கு நேரம் சரியில்லை அதனால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது’ என்று தன்னைத்தானே நொந்துகொள்வதும் வாடிக்கையான நிகழ்வு. அப்படிப்பட்டவர்களுக்கு சரியான
ரூ.70/-
Reviews
There are no reviews yet.