Description
ரமேஷ் வைத்யா _ முத்து
சிறுவர்களை மட்டுமல்லாமல் பெரியவர்களையும் சுண்டி இழுப்பதில் காமிக்ஸுக்கு நிகர் வேறு இல்லை. ஜப்பானிய மொழியின் வரிவடிவமே சித்திரங்களிலிருந்து வந்ததுதான் என்பார்கள். அதனால்தானோ என்னவோ ஜப்பானில் நூற்றுக்கணக்கான பக்கங்களோடு காமிக்ஸ் தொகுப்புகள் ஏராளமாக வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. காமிக்ஸுக்குக் கிடைக்கும் வரவேற்பால் அவை அனிமேஷன் திரைப்படங்களாகவும் எடுக்கப்படுகின்றன. நம்மில் பலரும் ஆங்கிலத்திலிருந்து நேரடியாக மொழியாக்கம் செய்யப்பட்ட காமிக்ஸைதான் படித்திருப்போம். என்னதான் அவை விறுவிறுப்பாக இருந்தாலும் அவற்றில் சிறு அந்நியத் தன்மை அகற்றமுடியாதபடி காணப்படும். அந்த வகையில், தமிழில் நேரடி காமிக்ஸ் என்ற புதிய முயற்சியை சுட்டி விகடன் தொடங்கியது. இலவச இணைப்பாக காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட்டது. அதிரடியாக வெளிவந்த அந்த வண்ணமயமான காமிக்ஸ் புத்தகங்கள், சிறுவர்களை மட்டுமல்லாது பெரியவர்களையும் ஈர்த்து, ரசிக்கவைத்தன. விகடன் பிரசுரத்தின் இந்த காமிக்ஸ்ஸில், மேற்கத்திய காமிக்ஸின் தாக்கம் இல்லாமல், ஆனால், அவற்றின் விறுவிறுப்புக்கு சற்றும் குறையாமல், எல்லாப் பக்கங்களும் வண்ணமயமாக உருவாக்கப்பட்டுள்ளன. வ
ரூ.65/-
Reviews
There are no reviews yet.