Description
ரா.ராஜமுருகன்
உடல் என்பது ஓர் உயிர் இயந்திரம். அந்த இயந்திரத்தை இயக்குவது உணவாகும். முன்னுரிமை தருவது உயிருக்காகத் தான் என்பதை உணர்ந்தாலே, உடல் அதன் இஷ்டத்துக்கு உண்ணுவதைத் தவிர்த்து உயிரைக் காக்கும். நல்ல உணவு ஆரோக்கியத்தை மாத்திரம் அல்ல… ஆயுளையும் தீர்மானிக்கிறது. ஆகவே உண்ணும் உணவை நாம் தேர்ந்தெடுக்கும்போதே ஆயுளையும் சேர்த்து தீர்மானிக்கிறோம். உடலுக்கு முக்கியம் உணவும் உழைப்பும். இரண்டில் எது சிதைந்தாலும் ஆபத்துதான். ஆனால் இன்றைய நிலை என்ன? துரித உணவும் அதன் சாரமும் மனிதனை உழைக்க முடியாத அளவுக்கு ஒரே இடத்தில் பிடித்துவைத்திருக்கிறது. விளைவு: நோய்… மருந்து… உயிரிழப்பு. பெரியவர், இளைஞர், சிறு குழந்தைகளுக்கென நல்ல உணவு முறையையும் உடல் உழைப்பையும் அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தை இந்த நூல் உணர்த்தி உள்ளது. பாரம்பர்யமாக சிறு தானியங்களில் செய்துவந்த பனியாரம், புட்டு, தோசை, கொழுக்கட்டை, அதிரசம், போன்ற விதவித ஸ்நாக்ஸை அனைத்து வயதினருக்கும் ஏற்ற விதத்தில் மீண்டும் வழக்கத்துக்குக் கொண்டுவரும் நோக்கில் செய்முறையோடு விளக்கியிருப்பது கூடுதல் சிறப்பாகும். மென்மையான சப்பாத்திக்காக அதிக அளவு குளுட்டனைச் சேர்க்கிறார்கள்; இது இரைப்பை புற்றுநோயை வரவைக்கிறது. கீரையை, மஞ்சளும் உப்பும் கலந்த நீரில் கழுவிய பிறகு சமைப்பது நல்லது; கீரையுடன் சமையல் சோடா பயன்படுத்தக்கூடாது போன்ற டிப்ஸுகளுடன் நஞ்சு இல்லா உணவு எது..? அதை சுத்தமாக சுவையாக எப்படி சமைப்பது..? எந்த வகை பாத்திரத்தை உபயோகிப்பது, சேகரிப்பது? போன்ற ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நலன்தரும் தகவல்களை நூல் ஆசிரியர் ராஜமுருகன் விளக்கியுள்ளார். ஆனந்தவிகடனில் தொடராக வந்த நல்ல சோறு, நூலாக்க வடிவில் சத்தான, சுவையான, சுத்தமான உணவை தர காத்திருக்கிறது; உயிர் காக்கும் உணவுக்கு உள்ளே வாங்க…
ரூ.120/-
Reviews
There are no reviews yet.