Description
பா.முருகானந்தம்
அலங்கரிக்கப்படாத உண்மைகளே வரலாற்றுக்கு அழகு. சுவாரஸ்யம் என்கிற பெயரில் கற்பனைகளையும் அனுமானங்களை நிறைத்து எழுதுவது வரலாற்று வழக்கமாகிவிட்டது. அத்தகைய வழி செல்லாமல், எல்லாவிதமான சேகரிப்புகளோடும் தேடுதலோடும் ராபர்ட் கிளைவ் வாழ்ந்து வீழ்ந்த வரலாற்றை அற்புதப் பதிவாக இந்த நூலில் வழங்கி இருக்கிறார் நூல் ஆசிரியர் பா.முருகானந்தம். ஆங்கில பிரபுவாக மட்டுமே ராபர்ட் கிளைவ் குறித்து நம் பாடப் புத்தகங்கள் விளக்கி இருக்கின்றன. ராபர்ட் கிளைவின் ஆரம்பகால மெத்தனம் தொடங்கி, மனநிலைக் குழப்பம், வேலையில் விருப்பமின்மை, தற்கொலை முயற்சி, வாழ்க்கைப் போராட்டம் என அடுத்தடுத்து அவர் எதிர்கொண்ட சறுக்கல் களையும், ஒருகட்டத்தில் பிரச்னைகளையே வெற்றிக்கான சூத்திரங்களாக மாற்றிக்கொண்டு அவர் ஏறுபடிகளில் வீறுநடை போட்டதையும் யதார்த்தமான நடையில் விளக்குகிறது இந்த நூல். சென்னையில் பணியாற்றியபோது மனச்சிதைவு நோய்க்கு ஆளாகும் அளவுக்குப் பணிச்சுமை கொண்ட ராபர்ட் கிளைவ் தற்கொலைக்கு எண்ணி துப்பாக்கியால் தன்னைச் சுட்டுக்கொள்ள முயற்சித்ததும், துப்பாக்கி சரிவர இயங்காததால் அவர் தப்பியதும் இதுவரைக் கேள்விப்படாத பதிவு. கடைசிக்காலத்தில் அவர் தற்கொலை செய்துகொண்டாரா, கொலைக்கு ஆளானாரா என்கிற உண்மை தெரியாத அளவுக்கு அவருடைய முடிவு அமைந்து போனது பெருந்துயரம். நாடோடியாக, பற்று அற்றவராக, மனத் தெளிவு இல்லாதவராக அறிமுகம் கொண்ட ராபர்ட் கிளைவ், வரலாற்றின் முக்கியப் பக்கங்களில் இடம்பெறுகிற அளவுக்குத் தன்னை முன்னிறுத்திய விதம் ஆச்சர்யம் அளிக்கிறது. ஒரு வரலாற்று நாயகனின் பதிவாக மட்டும் அல்லாது, மனதை வைராக்கியப்படுத்தும் நம்பிக்கை வெளிச்சமாகவும் இந்த நூல் அமைந்திருக்கிறது. ஜோடனை இல்லாத வெகு யதார்த்தமான நடையில், கால இடைவெளிக்கான ஒப்பீட்டில் நம்மை ஆண்ட ஆங்கில பிரபுவின் வரலாற்றை கண்முன்னே நிறுத்தும் இந்த நூல், வாசிக்கும் அனைவரையும் நிச்சயம் சிலிர்க்க வைக்கும்.
ரூ.100/-
Reviews
There are no reviews yet.