Description
நாளும் பொழுதும்’ நூலில் நான் புழங்கும் மூன்று தளங்களைச் சேர்ந்த கட்டுரைகள் உள்ளன. ஒன்று என் அந்தரங்க வாழ்க்கை. இன்னொன்று திரையுலகம். மூன்றாவது நான் வாழும் சூழல். அனுபவங்களில் இருந்து ஒரு மேலெழல் நிகழ்ந்த குறிப்புகளை மட்டுமே இங்கே சேர்த்திருக்கிறேன்.
ஏற்கனவே வாழ்விலே ஒருமுறை, நிகழ்தல் போன்ற தொகுதிகளில் என் இத்தகைய எழுத்து-கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவை வாசகர்-களுக்கு மிக நெருக்கமானவையாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். ஏனென்றால் இவை உண்மை-யான அனுபவங்கள் என்ற பிரக்ஞை இவற்றுக்கு வாசகரின் நம்பகத்தை உருவாக்கித் தருகிறது. அந்த உண்மையனுபவத்தில் இருந்து எழும் ஓர் உணர்ச்சி அல்லது தரிசனம் வாசகன் எளிதில் தொட்டறியக் கூடியதாக உள்ளது. சிறந்த புனைவுத் தருணங்கள் அளவுக்கு இந்த அனுபவத் தருணங்களும் கலைத்-தன்மையை அடைவது இப்படித்தான்.
Reviews
There are no reviews yet.