Description
டாக்டர் சு.முத்துச்செல்லக்குமார்
தந்தையின் அன்பைவிட தாயின் அன்பே மகத்தானது என்பதற்கு இரண்டு சாட்சிகள். தாயைப்போல் ஒரு குழந்தையை தந்தையால் 10 மாதங்கள் வயிற்றில் சுமக்க முடியாது. அடுத்தது, குழந்தையின் சக்திக்கும் வளர்ச்சிக்கும் உதவும் விதமாக, தன் ரத்தத்தையே பாலாக்கிக் கொடுக்கும் ஒரு தாயைப்போல் தந்தை செயல்பட முடியாது. கருப்பையும், மார்பகமும் பெண் என்கிற பெருந்தெய்வத்துக்கு கிடைத்த மகத்தான வரங்கள். வரமே சாபமாவதுதானே மனிதகுல வாழ்வின் வழக்கம். இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்னைகள் பெரும்பாலும் மார்பகம் மற்றும் கர்ப்பப்பை சம்பந்தப்பட்டதாகவே இருக்கின்றன. கர்ப்பப்பை குறித்த விழிப்பு உணர்வு சமீபகாலமாக அதிகமானாலும், மார்பகம் குறித்து அந்த அளவுக்கு அறிவுறுத்தல்கள் எழவில்லை. அதனை நிறைவு செய்யும் விதமாகவே மார்பகப் பராமரிப்பு குறித்து தெளிவான விவரங்களோடு இப்படி ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார் மருத்துவர் சு.முத்துச்செல்லக்குமார். மார்பகப் பாதிப்புகள் குறித்தும், அதில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் படங்களுடன் விளக்கிச் சொல்லும் இந்தப் புத்தகம், பெண்ணாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் வணங்கத்தக்க வழிகாட்டியாக உதவும்!
ரூ.75/-
Reviews
There are no reviews yet.