நிழலின் தனிமை

125.00

சிற்றிதழ்கள் வட்டாரத்தில் பரவலாக அறிமுகமான, 30 வருடங்களாக எழுதி வரும் எழுத்தாளர் தேவிபாரதியின் முதல் நாவல் இது.“காமம், அதையொட்டிய அதிகாரம், அதற்கெதிரான வஞ்சினம், பழி தீர்க்கும் வெறி என்று மன இருளின் வெவ்வேறு நிற பேதங்களைச் சொற்கள் மூலம் உருவாக்குகிறது இந்த நாவல்” என்கிறார் கவிஞர் சுகுமாரன், முன்னுரையில்.

சிறுகதைமூலம் அறிமுகமாகி கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள் எழுதி வரும் தேவிபாரதியின் நாவல் இது. சகோதரியைப் பலாத்காரம் செய்த செல்வந்தனிடம் ‘உன்னை வெட்டிக் கொன்று பழிவாங்குவேன்’ என்று சபதமிடும் சிறுவன் பெரியவனாக வளர்ந்து எழுத்தராகப் பணியில் சேர்ந்து கிராமப்புற அரசு  மேல்நிலைப் பள்ளிக்கு மாறுதலில் வருகிறான். அங்கு செல்வந்தனைச் சந்திக்கும் அவன், பழிவாங்க கனிந்து வந்த பல்வேறு சந்தர்ப்பங்களை ஏனோ நழுவவிட்டு செல்வந்தன் இயற்கை மரணம் அடையும் வரை காத்திருக்கிறான். செல்வந்தனின் மரணம் உறுதியாகி விட்ட நிலையில், பாதிக்கப்பட்ட சகோதரியை வரவழைக்கிறான். ‘அது அவனில்லெ. வேறு யாரோ. அவனுக்கும் இவனுக்கும் சம்பந்தமேயில்ல. பேரு மட்டும் ஒண்ணு. நீ தப்பா புரிஞ்சுகிட்டே’ என்று விடைபெறுகிறாள் சகோதரி. மன இருளை வெளிச்சத்துக்குக் கொணர்ந்து வாசகனை வசியப்படுத்தும் வீச்சுடன் செல்லும் இந்த நாவலின் கதைச் சுருக்கம் இதுதான்.
உளவியல் அலசலும் சமூக விமர்சனமும் நிறைந்த இந்த நாவலில் காம வாடை சற்று தூக்கலாக இருப்பது நெருடல். மனித மனத்தின் சீற்றம், பகை, தந்திரம், வேட்கை, அவமானம், தோல்வி என அனைத்தையும் ஒருசேர இந்தப் படைப்பில் காண முடிகிறது.

Categories: , , Tags: , ,
   
Description

தேவிபாரதி

ரூ.125/-

Additional information

Weight 0.215 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “நிழலின் தனிமை”

Your email address will not be published. Required fields are marked *