Description
பொன்.திருமலை
உணவே மருந்தாக இருந்த காலம் மலையேறி மருந்தே உணவாக மாறிவிட்டது இப்போது. அவசரம் சுமந்த வாழ்க்கை ஓட்டத்தில் உணவுக்காக நிதானம் காட்டக்கூட நமக்கு நேரம் இல்லை. என்ன சாப்பாடு, அதில் என்ன சத்து உள்ளது, நமக்கிருக்கும் பிரச்னைகளுக்கும் சாப்பிடும் உணவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்கிற எவ்விதப் புரிதலும் நமக்கு இல்லை. நாகரிகம், வளர்ச்சி, வேகம் என்கிற அசுரத்தனமான போக்கில் நம் உணவுப்பழக்கங்களில் இருந்து காய்கறிகளைக் கட்டம் கட்டி வைத்துவிட்டோம். வியாதிகள் பெருகிப்போய்விட்ட நிலையில்தான் காய்கறிகளின் அவசியம் நமக்குப் புரிகிறது. இயற்கையின் பெருங்கொடையாக நமக்கு வாய்த்திருக்கும் காய்கறிகள் குறித்து எளிய நடையில் அற்புதமாக எழுதி இருக்கிறார் பொன்.திருமலை. காய்கறிகளில் உள்ள எண்ணிலடங்கா சத்துக்களை எல்லோருக்கும் புரியும்வண்ணம் விளக்கி இருக்கிறார். காய்கறிகள் அனைத்துமே நன்மை தரக்கூடியவை எனப் பொத்தம்பொதுவாகச் சொல்லாமல், எந்தக் காய்கறி உடலைக் குளிர்ச்சியாக்கும், எது உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தும், எந்த நேரத்தில் எந்தக் காய்கறியைப் பயன்படுத்துவது, காய்கறிகளை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை என சிறு குழந்தைக்கும் புரியும் விதமாக எழுதி இருப்பது சிறப்பு. சர்க்கரை நோய் உள்ளவர்களும் ரத்த அழுத்தம் உள்ளவர்களும் தவிர்க்க வேண்டிய காய்கறிகளையும் இந்த நூல் பட்டியல் போடத் தவறவில்லை. காய்கறிகளின் மகத்துவத்தையும் இன்றைய தலைமுறை காய்கறிகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தையும் ஒருசேர வலியுறுத்தும் உணவு வழிகாட்டி இந்த நூல்!
ரூ.100/-
Reviews
There are no reviews yet.