Description
எஸ்.பி.அண்ணாமலை
வியாபாரத் துறையில் சாதனை படைத்தவர்கள் பற்றி ஆனந்த விகடன் இதழில் _ நாணயம் பகுதியில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. ‘புரபஷனல் கூரியரை ஆரம்பித்தவர் நெல்லைக்காரர்!’ என்பதில் ஆரம்பித்து, கே.பி.என்.டிராவல்ஸின் வளர்ச்சியில் அதன் அதிபர் காட்டிய அதீத அக்கறை… இப்படி ஒவ்வொரு வாரமும் வெளியான இந்தக் கட்டுரைகளை ஆர்வத்தோடு படித்து மகிழ்ந்தார்கள் விகடன் வாசகர்கள். நம்மைச் சுற்றி உள்ள பிரபல ‘பிராண்ட்’களை தங்கள் உழைப்பால் உருவாக்கி அதை சிகரத்துக்குக் கொண்டு சென்றவர்கள் நம் பக்கத்திலேயே இருக்கிறார்கள் என்ற உண்மை பலரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது! அதோடு, இந்தத் தொடர் பலரையும் தொழில் துவங்கும் ஆர்வத்துக்குத் தூண்டி இருக்கிறது. காரணம், தன்னம்பிக்கைக் கட்டுரைகளை மட்டுமே படித்து வந்த தமிழர்கள், இந்த வெற்றிக் கதைகளைப் படித்துவிட்டு, தங்கள் வாழ்க்கையின் வியர்வைப் பக்கங்களைப் புரட்டி புதிய பாடங்களைக் கற்றுக் கொடுத்த தொழில் அதிபர்களை கனவு நாயகர்களாகப் பார்த்தார்கள். அம்பானியும் பில்கேட்ஸும் சாதித்ததைவிட, இந்த மண்ணின் மைந்தர்களான இவர்களின் வெற்றிக் கதைகள் நெருக்கமான பல கதைகளைச் சொல்
ரூ.100/-
Reviews
There are no reviews yet.