Description
மரியை எனக்குத் தெரியும். அன்புக்கு ஏங்கிய ஆத்மா அவள். வசதியான குடும்பம். தெருவில் மூன்று கார்கள் நின்றன. நான்கு வேலைக்காரர்கள் இருந்தார்கள். வீட்டில், அம்மா இல்லை. அதாவது குழந்தையிடம் இல்லை. அப்பா, பணம் பண்ணிக் கொண்டிருந்தார். அம்மாவும் அப்பாவும் தன்னைப் புறக்கணிக்கிறார்கள் என்று மரி நினைத்தாள். அவள் உலகை வெறுக்கத் தொடங்கினாள். குழந்தைகள் பெற்றோர்களிடம், ஆசிரியர்களிடம், உலகத்திடம் அன்பை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்த ஒரே மொழி அதுதான். அது மட்டும்தான். அதைக்கூட கொடுக்க முடியாத அளவுக்கு மனிதர்கள் மரத்துப் போய்விட்டார்கள் என்பது நம் காலத்து அவலம்.
– பிரபஞ்சன்
Reviews
There are no reviews yet.