Description
வி.எஸ்.நடராசன்
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். _ ‘நோய் இன்னதென்று அறிந்து, அதன் காரணத்தை ஆராய்ந்து, அதைப் போக்கும் வழியைக் கண்டுபிடித்து, உரிய மருத்துவ உதவியைப் பிழையில்லாமல் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் நோய் அடியோடு ஒழிந்து விடும்’ என்பது வள்ளுவர் வாக்கு. முதுமையில், உடல் தளர்ச்சியினாலும், சத்தில்லாத உணவினாலும் நோய்களின் தாக்குதல் அதிகமாக இருக்கும். நோய் வராமல் தடுத்து உடல்நலத்தைப் பாதுகாக்க, உணவு முறையையும், உடற்பயிற்சியையும் சீராகக் கடைப்பிடிக்க வேண்டும். நோயின் அறிகுறி தெரிந்தால் அதை அடியோடு ஒழிக்க முயற்சி செய்யவேண்டும். முதுமையில் வரும் நோய்கள் என்னென்ன… அந்த நோய்கள் வருவதற்கான காரணங்கள் என்னென்ன… நோய் வந்துவிட்டால் அதிலிருந்து எப்படி தற்காத்துக்கொள்வது… நோய்க்குரிய சிகிச்சை முறைகள் என்ன… மருந்துகளை உட்கொள்ளும் முறைகள் என்ன..? _ இப்படி பல கேள்விகளுக்குத் தெளிவான பதில் சொல்கிறார் 30 ஆண்டுகள் அனுபவம் கொண்ட முதியோர் மருத்துவர் வி.எஸ்.நடராசன். இந்த நூல், முதியோர் தங்கள் வாழ்நாளில் உடல்நலத்துடன் வாழ வழி காட்டியிருப்பதோடு, பலருடைய சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும் வகையில், எளிய தமிழில் அனைவருக்கும் விளங்கும் நடையில் ‘கேள்வி_பதில்’ பாணியில் எழுதப்பட்டிருக்கிறது. இளைஞர்களும் இந்த நூலைப் படித்துத் தெரிந்துகொண்டால், தங்கள் தாத்தா, பாட்டி, தாய், தந்தை ஆகியோரின் நிலையைப் புரிந்து கொண்டு, அவர்களுக்கு வழிகாட்டவும் இந்த பதில்கள் உதவும்!
ரூ.100/-
Reviews
There are no reviews yet.