Description
கௌதம சித்தார்த்தன்
தமிழ்நிலம் முழுமைக்குமான ஆதிக்கடவுள் முருகனைமெல்ல மெல்ல தமிழ்ப்பரப்பிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியில்ஒதுக்கி வைத்து, விநாயகனை தமிழ்ப்பரப்பு முழுமைக்குமானபொதுமைப்படுத்தப்பட்ட கடவுளாக மாற்றுவது. அப்படியானஒரு பிம்பத்தைக் கட்டமைக்கும்போது அது எளியதன்மையுடனோ, எளிய மானுட உருவத்துடனோ சித்தரிக்காமல்,எளிய மக்களிடையே எதிர் வாதங்கள் எழும்பாமல் அச்சுறுத்தும்தன்மை கொண்டதாக இருக்கவேண்டும். மட்டுமல்லாது,தங்களது வைதீகக் கருத்துக்களை ஓங்கி ஒலிக்கும் வல்லமையுடனும் ஒளிர வேண்டும். அதுமட்டுமல்லாது, தொடர்ச்சியாக அந்த பிம்பத்தை ஞானமார்க்கத்தின் முதன்மையான கடவுளாக உருவேற்றிக் கொண்டேயிருக்கவேண்டும் என்பதில் தீவிரமாய் முனைந்தனர்.அந்தக் கட்டமைப்பு அப்போதைய தருணத்தில் தங்களது ஆதிக்கத்தை முன்வைப்பதற்காக அந்த பிம்பத்தைக் கட்டமைத்திருக்கலாம். ஆனால், தொடர்ச்சியாக நிகழும் காலச் சுழற்சியில்அது ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட பிம்பமாக மாறுகிறது.அதிகாரமாக மாறுகிறது. அதிகாரத்தைத் தக்க வைக்கும்அரசியலாக மாறுகிறது.
ரூ.40/-
Reviews
There are no reviews yet.