Description
ஆர்.குமரேசன்
‘வருமானத்தில் பாதி மருத்துவத்துக்கே செலவாகிறது’ என்ற புலம்பல் எல்லாப் பக்கமும் கேட்கிறது. இயற்கையைப் புறக்கணித்ததன் விளைவை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். பாரம்பரிய உணவு குறித்தும் பாரம்பரிய மருத்துவம் குறித்தும் மக்கள் தற்போது பேசத் தொடங்கியுள்ளனர். எந்தவித பின்விளைவுகளும் இல்லாத சித்த மருத்துவத்தை மக்கள் நாடத் தொடங்கியுள்ளனர். மருத்துவரிடம் செல்லாமல் கிடைக்கும் மருந்துகளைக் கொண்டு நம்முடைய நோயைக் குணமாக்கிக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் நாமும் மருத்துவர்தானே! நாம் புறக்கணித்த சித்த மருத்துவம் ஒரு செடியைப் போல மீண்டும் வளரத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் இந்த ‘மூலிகை வனம்’ நம்முடைய அடிப்படை நோய்களைத் தீர்க்கக்கூடிய மருத்துவ நூல். பசுமை விகடனில் வெளிவந்த தொடர் இப்போது உங்கள் கைகளில் புத்தகமாக! ஒவ்வொரு மூலிகையிலும் உள்ள மருத்துவக் குணங்களை விளக்குவதோடு சித்த மருத்துவர்களின் ஆலோசனைகளையும் ஆங்காங்கே கூறியிருக்கிறார் நூல் ஆசிரியர் ஆர்.குமரேசன். இந்த நூலில் உள்ள எல்லா மூலிகைகளும் ஏதோ ஒருவகையில் உங்களோடு தொடர்புடையதுதான்; பல இடங்களில் நீங்கள் பார்த்ததுதான்; உங்களால் வெட்டி வீழ்த்தப்பட்டதுதான்; வேறோடு பிடுங்கி எறியப்பட்டதுதான். பரவாயில்லை, நாம் மீண்டும் அந்த வேர்களோடும் இலைகளோடும் பயணிப்போம். நோய்களை வரும்முன்னே விரட்டுவோம்!
ரூ.110/-
Reviews
There are no reviews yet.