Description
காமெடி பஜார்
விகடனின் சிறப்பே நகைச்சுவைதான்! ஒரு நகைச்சுவை நடிகரின் வாழ்வையும் அனுபவங்களையும் வைத்து ஒரு தொடர் ஆரம்பிக்கலாம் என முடிவுசெய்தபோதே பளிச்சென்று மனதில் தோன்றியவர் வடிவேலு. சமீபகாலமாக தமிழகத்தின் எல்லா திசைகளையும் குலுங்கவைக்கிற சிரிப்பு வித்தைக்காரர்! எங்கேயோ மதுரையிலிருந்து லாரியேறி கோடம்பாக்கத்தின் இரும்புக்கதவுகளை உடைத்துக்கொண்டு இன்று தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்துக்கொண்ட வடிவேலுவின் வாழ்க்கையும் சுவாரஸ்யமான கதை. அதை அவர் மொழியிலேயே சொல்கிற இந்தக் கட்டுரைகள் ஒவ்வொன்றும் சிரிப்பு ப்ளஸ் சிந்தனைச் சரங்கள். வடிவேலுவின் ஸ்பெஷல்… அவர் நகைச்சுவையில் இழையோடும் மண்மணம். இந்தக் கட்டுரைகளிலும் மனசைக் கொள்ளைகொள்ளும் மண்மணம் நிரம்பி வழிகிறது. இதைப் படித்து முடிக்கும்போது நம் ஒவ்வொருவரின் பாதங்களிலும் மதுரை மண் ஒட்டிக்கொள்ளும். நம் அறைக்குள் சில்லென்று வைகையாறு ஓடி வரும். வெறுமனே ஒருவருடைய சொந்த அனுபவங்களாக இல்லாமல் விதவிதமான மனிதர்கள், அவர்களின் குணநலன்கள், நம் கலாசாரம் மாறிவரும் சூழல் என எல்லாவற்றையும் கலகலப்பாய் பேசும் இந்தக் கட்டுரைகளை சிரிப்பு இலக்கியம் என்றே சொல்லல
ரூ.85/-
Reviews
There are no reviews yet.