Description
பெருமாள்முருகன் தன் வாழ்க்கை அனுபவங்களோடு தனிப்பாடல்கள் இயைந்த விதம் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
தனிப்பாடல்கள் சொல் விளையாட்டுக்களைப் பரவலாகக்கொண்டிருந்தபோதும் வாசகனுக்கு எந்தச் சிரமத்தையும் கொடுப்பனவல்ல. ஆனந்தத்தோடு உள்ளே நுழைவ தற்கான திறப்புகள் உண்டு. அவற்றிலிருந்து அதே ஆனந்தத்தோடு வெளிவரலாம்.
வேறு எந்த முன்பின் தொடர்ச்சியும் தேவையில்லாமல் ஒரு பாடல் தனித்து ஈர்ப்பதாக இருப்பது தனிப் பாடல்களின் சிறப்பிற்கு முக்கியக் காரணம். அவற்றின் சொல்லாட்சிகள் மிகவும் எளிமையானவை. உரைகள் தேவையில்லாமலே படித்துப் புரிந்து கொள்ளலாம். எளிய சொற்கள் கவிதைச் சொற்களாக மாறும் விந்தை தனிப்பாடல்களில் நிகழ்கிறது.
Reviews
There are no reviews yet.