வாழ்க்கை இனிது… வழிமுறை எளிது!

85.00

உடல் ஆரோக்கியத்துக்கு மனமே மூலகாரணம். ‘உடலுக்குப் போதிய ஓய்வு இருந்தால் மன சஞ்சலம் என்பதே இருக்காது’ என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். யோகா, தியானம் செய்வதன் மூலம் உடல் எந்தளவுக்குப் புத்துணர்ச்சி அடையும் என்பதை சொல்லத் தேவை இல்லை. அதேபோல், அதிகாலை நேரத்தின் அமைதியேகூட, மன நிம்மதிக்கு வழிவகுக்கும். அதிகாலையில் விழித்தெழுந்து, அந்த அமைதியை அனுபவித்துப் பாருங்கள். ஆரோக்கிய வாழ்க்கையின் ரகசியத்தை முழுமையாக உணர்ந்து உற்சாகம் அடைவீர்கள். இப்படி, உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொண்டு, வாழ்க்கையை இனிமையாக அமைத்துக் கொள்ள எளிய வழிமுறைகளைச் சொல்கிறது இந்த நூல். அன்றாட வாழ்க்கையின் பரபரப்பில் சிக்கிக் கொண்டு அவஸ்தைப்படுவது பெரும்பாலும் பெண்கள்தான். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் விரைவில் சோர்வடைந்து பலவிதமான நோய்களுக்கு ஆட்பட்டு விடுகிறார்கள். பெண்களைப் பெரிதும் தாக்கும் நோய்கள் பற்றியும், அதற்கான தீர்வுகள் பற்றியும், அவள் விகடன் இதழ்களில் ‘டாக்டர் விகடன்’ பகுதியில், மருத்துவர்கள் சொன்ன வழிமுறைகளும், சக்தி விகடன் இதழ்களில் ‘டாக்டர் விகடன்’ பகுதியில், பிரபலமானவர்கள் விவரித்த அனுபவங்களும், மனதை லகுவாக்கி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வழிகாட்டுகின்றன. வாசகிகளின் பெரும் வரவேற்பைப் பெற்ற அந்தக் கட்டுரைகளின் தொகுப்புதான், ‘வாழ்க்கை இனிது… வழிமுறை எளிது!’ இந்த நூலை ஆழ்ந்து படித்து, அவரவர் உடல், மனம் மீது அக்கறை எடுத்துச் செயல்பட்டால் குடும்பத்தில் என்றும் ஆரோக்கியம் தவழும்.

Categories: , , Tags: , ,
   
Description

விகடன் பிரசுரம்

ரூ.85/-

Additional information

Weight 0.131 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “வாழ்க்கை இனிது… வழிமுறை எளிது!”

Your email address will not be published. Required fields are marked *