வாஷிங்டனில் திருமணம்

65.00

ஆனந்த விகடனில் 1963ல் எழுத்தாளர் யாரென்று குறிப்பிடாமல், அத்தியாய எண் இல்லாமல் பதினோரு வாரங்கள் இடம்பெற்ற நகைச்சுவைத் தொடர்கதை வாஷிங்டனில் திருமணம்! தொடரின் கடைசி அத்தியாயம் வெளியானபோதுதான் அந்தத் தொடரை எழுதியவர் சாவி என்பது வாசகர்களுக்குத் தெரிந்தது! அந்த இதழிலும் கூட சுபம் என்று தொடரை முடித்த பிறகு ஒரு கையெழுத்து போல்தான் அவரது பெயர் இடம் பெற்றது. அப்போது அவர் ஆனந்த விகடனில் பணியாற்றிக் கொண்டிருந்தார். இந்தக் கதை பிறந்த விதம் குறித்து, பின்னர் வெளியான வாஷிங்டனில் திருமணம் புத்தகத்தின் முன்னுரையில் அமரர் சாவி தெளிவாகவே விவரித்திருக்கிறார். இந்த நகைச்சுவைக் கதைக்கு அவர் தேர்ந்தெடுத்த விஷயமும் அது நடைபெறுவதற்கு அவர் தேர்ந்தெடுத்த களமுமே சட்டென்று சிரிப்பை வரவழைக்கக் கூடியவை. சாதாரணமாக கல்யாணங்களில் எதுவெல்லாம் யதேச்சையாக நடைபெறுமோ, அவற்றையெல்லாம் நகைச்சுவைக்கான இழையாகப் பின்னியெடுத்து, அதை வரிசைப்படுத்தி அழகாகக் கதையை நகர்த்திச் செல்கிறார் சாவி. நமது பண்பாடு மற்றும் கலாசாரத்துக்கு நேர்மாறான மற்றொரு நாட்டில், நமது பண்பாட்டுக்குச் சேதாரம் ஏற்படாத வகையில் கற்பனை விரைவாகப் பயணிக்கிறது. இந்த

Out of stock

Categories: , , , Tags: , , ,
   
Description

சாவி

ரூ.65/-

Additional information

Weight 0.131 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “வாஷிங்டனில் திருமணம்”

Your email address will not be published. Required fields are marked *