Description
லக்ஷ்மி கைலாசம்
அன்றாட வாழ்வில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு வணிக நடவடிக்கையின்போதும், பொருளின் விலையோடு சேர்த்து வரியாக குறிப்பிட்ட அளவு பணம் செலுத்துகிறோம். அது அரசாங்கம் நடத்துவதற்குத் தேவையான நிதி ஆதாரமாக இருக்கிறது. மேலும் நாட்டின் முன்னேற்றத் திட்டங்கள் செயல்படவும், கட்டமைப்பு வசதிகள் மேம்படவும் தேவையான பணத்தை வரிகள் மூலமே அரசாங்கம் திரட்டுகிறது. நம் பாரம்பரிய வாழ்க்கை வரலாற்றை எடுத்துப் பார்த்தால், சாணக்கியர் காலத்தில் இருந்த வரி நடைமுறைகள் எப்படி இருந்தன என்பதையும், எந்த அளவுக்கு குடிமக்களிடம் வரி விதிக்கப்பட வேண்டும் என்று வகுத்திருந்தார்கள் என்பதையும் நாம் அறியலாம். உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறள், நம் பண்டைய வாழ்க்கை நெறிகளை வெளிப்படுத்துவது. அதில் ஆட்சிமுறை குறித்த அறிவுரைகளும் உண்டு. உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள். (குறள்:756) மன்னரை வைத்தே ஆட்சி தீர்மானிக்கப்படுகிறது என்பதால், அரசு நடத்தத் தேவையான பணத்தை ஆட்சியாளன் எவ்வகையில் தேடலாம் என்பதை வள்ளுவர் வாய்மறை இப்படி விதிக்கிறது. நிலவரியாக வந்த பொருளும், சுங்க வரியாக ஈட்டிய பொருளும், கப
ரூ.55/-
Reviews
There are no reviews yet.