Description
விஷ்ணுபுரம் நம் மரபின் பெரும் படிமவெளியை நவீன நாவல்வடிவுக்குள் அள்ளி நிறுத்தி ஓர் உலகை உருவாக்குகிறது. ஆகவே அது செவ்விலக்கியம். நம் செவ்வியல் ஆக்கங்களுடன் ஒப்புநிற்கும் தகுதி அதற்குண்டு என நான் நம்புகிறேன்.
ஆகவேதான் விஷ்ணுபுரம் வெளிவந்த நாட்களில் அது எதிர்கொள்ள நேர்ந்த சில்லறை விமர்சனங்கள் என்னைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. கண்டடையப்படாமல் கிடப்பதென்பது பேரிலக்கியங்களுக்குரிய இயல்பு என்ற எண்ணமே எனக்கிருந்தது. அதன் புதுமையாலும் வேகத்தாலும் விஷ்ணுபுரம் வெகுவாகக் கவனிக்கப்பட்டது, பேசப்பட்டது. தமிழில் தொடர்ச்சியாக இத்தனை வருடம் பேசப்பட்ட பிற படைப்புகள் குறைவே…
Reviews
There are no reviews yet.