Description
பசுமைக்குமார்
‘செல்வம் இல்லாத, பலவீனமான, படிப்பறிவற்ற மக்களுக்குச் சேவை செய்யும் மதம்தான் இந்தியாவுக்குத் தேவையான மதம். இந்த மதத்தைப் பரப்புவதுதான் என்னுடைய குறிக்கோள்!’ ‘ஏழை எளியவர்களுக்குச் சேவை செய்வதே கடவுளை வழிபடும் முறை!’ _ இப்படி 19_ம் நூற்றாண்டிலேயே, ஓர் இளைஞர் அதிரடியாக தனது கருத்துகளைச் சொன்னார்; சொன்னதோடு நின்றுவிடாமல் அவற்றின்படி வாழ்ந்தும் காட்டினார். அந்த இளைஞர்தான் வீரத்துறவி விவேகானந்தர்! சோம்பித் திரிந்து, நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்த இளைஞர்களை செயல் வீரர்களாக மாற்ற, ‘எழுமின், விழிமின்!’ என்று சொன்ன அந்த மகான், மேலும் வலியுறுத்திச் சொன்ன வாக்கியம் _ ‘இந்தியர்களின் உடனடித் தேவை தொழிற்கல்வியே தவிர, மதம் அல்ல’. சர்வசமய மகா சபை மாநாட்டுக்காக அமெரிக்காவின் சிகாகோ நகருக்குச் சென்றிருந்தபோது, அங்கே பிரமாண்டமான கூட்டத்தில் விவேகானந்தர் ஆற்றிய உரை, அகில உலகத்தையே இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த வீர உரை, விவேகானந்தரின் வாழ்க்கையிலும், இந்தியாவின் சரித்திரத்திலும் திருப்புமுனைப் பக்கங்கள்! விவேகானந்தரை இளைஞர்களின் நம்பிக்கை ஒளியாகக் காட்டியும், அவரது வாழ்க்கையில் நடந்த
ரூ.90/-
Reviews
There are no reviews yet.