Description
சுஜாதா
இதில் வரும் வேணியை எந்த நகரத்திலும் நீங்கள் சந்திக்க முடியும். ஒருவிதமான சாஸ்வதமான இந்திய கீழ் நடு வர்க்கப் பெண் இவள். இவள் தன் உயிர்வாழ்தலுக்காக ஒவ்வொரு கட்டத்திலும் போராட வேண்டும். காதல் என்பதெல்லாம், இவளுக்கு சந்தடி சாக்கில் வரும் உணர்ச்சிகளே! கூட்டத்தில் தள்ளிக்கொண்டு செல்வது போல விதி அல்லது ஓர் அபத்தமான நியதி இவளைத் தள்ளிக்கொண்டு செல்கிறது. ஏதோ தனக்கு நல்லது என்று பட்டதைச் செய்கிறாள். வேணியின் உண்மையான காதலன் யார் என்று நீங்கள் புத்தகத்தைப் படித்தபின் யோசித்துப் பார்க்கலாம்.
ரூ.100/-
Reviews
There are no reviews yet.