ஆன்லைனில் A to Z

225.00

இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் இரட்டை குழந்தைகளைப்போல ஆகிவிட்டன நம்  வாழ்க்கையோடு ஐக்கியமாகிவிட்ட கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும். அவசரகதியில் ஓடிக்கொண்டிருக்கும் மனித வாழ்க்கைக்குப் பேருதவி புரியும் சாதனங்களுள் இவையே இன்றைய காலகட்டத்தில் முதல் இடத்தில் உள்ளன. அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் நாம் கடுமையாக உழைக்க வேண்டிய இன்றையச் சூழலில் மின் கட்டணம், வீட்டுவரி, வருமானவரி எனத் தொடங்கி எல்லாவிதமான தேவைகளுக்காகவும் அலுவலகங்களின் படிகளில் ஏறி இறங்கி அலைவது முடியாத ஒன்று. அதுபோன்ற அலைக்கழிப்புகளில் இருந்தும், அவஸ்தைகளில் இருந்தும், கால விரயத்தில் இருந்தும் விடுதலை வாங்கிக் கொடுத்துள்ளது கம்ப்யூட்டரோடு இணைந்த இன்டர்நெட் எடுத்திருக்கும் ஆன்லைன் அவதாரம். இன்டர்நெட் வசதியோடு கம்ப்யூட்டர் இருந்துவிட்டால் எத்தனையோ வேலைகளை எப்போது வேண்டுமானாலும் வீட்டிலிருந்தே முடித்துக்கொள்ளலாம். அதிலும் லேப்டாப்பும் டேட்டா கார்டும் இருந்துவிட்டால், ஆன் தி வே-யில் ஆன்லைனில் அசத்தலாம், அவசியமான பல வேலைகளை அநாயாசமாகச் செய்து முடிக்கலாம். இது மட்டுமல்ல… பலரது வருமானத்துக்கும் வழி தேடிக் கொடுத்துள்ளது ஆன்லைன் சேவை. அத்தகைய ஆன்லைன் சேவைகளின் பன்முகச் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி குறித்த பல தகவல்களுடன், எளிமையான வார்த்தைகளால் இந்த நூலை உருவாக்கியுள்ளார் நூலாசிரியர் காம்கேர் கே.புவனேஸ்வரி. ஆன்லைன்பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள்கூட, எளிமையாகக் கையாளும் விதமாக படிப்படியாக விளக்கப் படங்களுடன், அடுத்தடுத்த செயல்முறைகளைத் தெளிவாகக் கொடுத்திருப்பது இந்த நூலின் தனிச் சிறப்பு. எல்லாமே இணையமயமாக மாறிவரும் காலகட்டத்தில் வாழ்ந்து வரும் ஒருவர், இணையத்தில் ஆன்லைன் சேவைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள முனைவதும், ‘ஆன்லைன் ஜாப்’ செய்ய விரும்புவதும், அதற்கான தளத்தினைத் தேடி அலைவதும்  ஆச்சர்யம் இல்லை, இது காலத்தின் கட்டாயம். நிச்சயமாக ஒரு சில வருடங்களில் ஏராளமான பணிகள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில்தான் நடக்க இருக்கின்றன.  ஆகவே, விரைவில் பெரும்பான்மையான பணிகள் ஆன்லைனில் வீட்டிலிருந்தபடியே செய்வதற்கு உகந்த பணியாக மாறிவிடும். அப்படிப்பட்ட மாற்றத்துக்குத் தகுந்தபடி நம்மை மாற்றிக்கொள்ளவும், ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்வதற்கான அடிப்படை புரிதலை நம்முள் ஏற்கவும் இந்த நூல் அற்புதமான வழிகாட்டி!

Description

காம்கேர் கே.புவனேஸ்வரி

ரூ.225/-

Additional information

Weight 0.377 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஆன்லைனில் A to Z”

Your email address will not be published. Required fields are marked *