வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப்

160.00

தெற்கே தரங்கம்பாடி-&நாகப்பட்டினம் தொடங்கி, வடக்கே காஷ்மீர், கிழக்கே வங்காளம், மேற்கே ஆப்கானிஸ்தான் என அகண்டு விரிந்த பேரரசை ஆட்சிசெய்தவர் மாமன்னர் ஔரங்கஜேப். ஐம்பது ஆண்டுகள் சிம்மாசனத்தில் வீற்றிருந்த ஔரங்கஜேப்பை ஒரு கொடுங்கோலன் என்று சரித்திரச் சான்றுகள் சொல்லி வருகின்றன. தன் தந்தை ஷாஜகானை சிறைக்குத் தள்ளி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தவர் ஔரங்கஜேப் என்று பாடப்புத்தகங்கள் நமக்குப் பாடம் நடத்தியிருக்கின்றன. தன் சொந்த அண்ணன், தம்பியை அப்பட்டமாக படுகொலை செய்தவர்; தன்னை எதிர்த்த மகனையும், மகளையும் விரட்டிக் கொன்றவர் என்றெல்லாம் வழிவழியாக ஔரங்கஜேப் பற்றி சொல்லி வரப்படும் தகவல்கள் உண்மைதானா? ஔரங்கஜேப் இந்துக்களை இம்சித்தவரா? பெண்களை அவமதித்தவரா? காதலிப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் தந்தவரா? இல்லை.. இல்லை… இல்லவே இல்லை என்று ஆதாரங்களுடன் மறுக்கிறார் நூலாசிரியர் செ.திவான். மிகச்சிறந்த வரலாற்று ஆய்வாளரான செ.திவான், ஔரங்கஜேப் எத்தகைய குணம் உடையவர்? அவர் மீது வீண்பழி விழக்காரணம் என்ன என்பதை அலசி ஆராய்ந்ததின் விளைவே ‘வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப்…’ ஒருவரைப் பற்றிய வரலாற்றை ஆய்வு செய்யும் போது, சம்மந்தப்பட்டவரைப் பற்றியோ, அவர் சார்ந்த சமூகத்தைப்பற்றியோ, காலத்தைப்பற்றியோ விளக்கங்களை ஆய்வாளர்கள், நூலாசிரியர்கள் வாசகர்களுக்கு விளக்குவார்கள். ஆனால், இந்த நூலில் ஔரங்கஜேப் யார் என்பதை உலகிற்கு உணர்த்த இந்து மதக் கோட்பாடுகளில் இருந்தும், கிருத்துவ, சமண மதங்களில் இருந்தும் எடுத்துக்காட்டுக்களை கையாண்டிருக்கிறார். வீரசிவாஜி யார்? சமணர்கள் கழுவேற்றப்பட்டது எப்படி? பாண்டிய மாமன்னர் இலங்கைத்தீவை பிடித்தது எப்படி-? என பல்வேறு வரலாற்று சம்பவங்களின் சுவையான பின்னணிகளை எடுத்துக்கூறுகிறார் செ.திவான். ஆக, வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப்… தனிப்பட்டவரின் வரலாற்று ஆய்வு மட்டுமல்ல. அகண்ட பாரதத்தின் ஐம்பதாண்டுகால சமூக வரலாறு. படித்துப்பாருங்கள்; அதிசயித்துப் போவீர்கள்!

Categories: , , Tags: , ,
   
Description

செ.திவான்

ரூ.160/-

Additional information

Weight 0.266 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப்”

Your email address will not be published. Required fields are marked *