Description
செங்கோட்டை ஸ்ரீராம்
சுதந்திரக் காற்றை சுவாசித்து நாம் சுகமாக வாழ்கிறோம் என்றால், அதற்குக் காரணம் நம் முன்னோர் செய்த தியாகம்தான். நிஜாம் மற்றும் நவாபுகளின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட பதவி மோகம், வரி வசூலிப்பதில் உண்டான போட்டி, சுதேச ஆட்சியாளர்களிடையே இருந்த ஒற்றுமையற்ற சூழல் போன்றவை வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயருக்கு சாதகமாகப் போயிற்று. அதன்பின் இருநூறு ஆண்டுகள் நம் நாடு அடிமைப்பட்டு மக்கள் அளவற்ற துன்பங்களுக்கு ஆளாக நேர்ந்தது. இவை நமக்கு இந்திய வரலாறு கூறும் விஷயங்கள். ஆங்கிலேயருக்கு எதிரான 1857 முதல் சுதந்திரப்போர் சிப்பாய் கலகமே என்றும், இல்லை அது ஒரு தேசிய எழுச்சி என்றும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. இவற்றை மையமாகக் கொண்டு, 1857ல் தமிழகத்தில் ஏற்பட்ட சுதந்திர எழுச்சியையும், அதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பூலித்தேவன் என்ற தமிழக பாளையக்காரர் எழுப்பிய முதல் சுதந்திரப் போர்க் குரலையும், அதனைத் தொடர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்த்த வீரர்களின் செயல்களையும் ஆவணங்களின் குறிப்புகளோடு இந்நூலில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். நவாபுகளுக்குள் உண்டான காழ்ப்பு உணர்ச்சியால், எப்படி நம் நாடு ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்ட
ரூ.50/-
Reviews
There are no reviews yet.