Description
பார்க்க…ரசிக்க…பிரமிக்க… என்று பல சுவைகளுடன் ஒரு மெகா விருந்து இந்த புத்தக வடிவில் தயாராகி இருக்கிறது. பல அரிய தகவல்கள், அது பற்றிய படங்களுடன் என்றால் சுட்டிகளுக்குக் கொள்ளைப் பிரியம்தானே! அதையே இன்னமும் கலக்கலாக… பிரமாண்டமாகக் கொடுத்து சுட்டிகளை பிரமிப்பு அடையச் செய்துள்ளோம் இந்த 3டி கொண்டாட்டம் நூல் மூலம்! நாட்டிலேயே முதல் முறையாக சுட்டிகளுக்கு என்று தமிழில் பிரத்தியேகமாக வெளியான முதல் 3டி இதழ் என்ற பெருமையை சுட்டி விகடன் தட்டிச் சென்றது. மாதம் இருமுறை என்கிற ரீதியில் வெளியான சுட்டி 3டி இதழ்களில் வெளிவந்த மேஜிக் படங்களின் தொகுப்புதான் இந்த நூல். சுட்டிகள் மட்டுமின்றி பெரியவர்களும் ஆச்சரியப்படும் விதமாக இதில் பல பிரமாண்டங்கள் உள்ளன. அதில் ஒன்று ஜாலி ட்ரிப்! அதாவது உங்களில் சிலர் பார்த்து ரசித்த… எதிர்காலத்தில் பார்க்கப்போகிற சென்னையில் உள்ள குயின்ஸ் லேண்ட், மைசூரில் உள்ள வன உயிரியல் பூங்கா, சோழ, பாண்டிய, பல்லவர் பேரரசுகளின் சிற்ப வேலைப்பாடுகள், கன்னியாகுமரியின் அடையாளமாகக் கருதப்படும் முக்கியமான இடங்கள் மற்றும் ஜம்போ சர்க்கஸ் ஆகியவற்றை அப்படியே படம் பிடித்து வந்து 3டி விரு
ரூ.95/-
Reviews
There are no reviews yet.