ஆசிரியர்: பூவுலகின் நண்பர்கள் ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்ததாம் நரி என்று கேட்டுள்ளோம் பசுமைப்புரட்சி என்ற பெயரில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி வியாபாரங்களில் நுழைந்த பன்னாட்டு நிறுவனங்கள் இன்று நமது வாழ்வின் மூலாதாரமான விதைத்துறையிலும் நுழையவிருக்கின்றன இதனால் வரும் அபாயத்தை நினைத்துப்பார்தோமானால் நமது வருங்காலத்தைக் குறித்த அச்சத்தைத் தோற்றுவிக்கிறது வடிவுரிமை என்ற பெயரில் நமது விதைகளையெல்லாம் பன்னாட்டு நிறுவனங்கள் கபளீரம் செய்யத்துவங்கிவிட்டன. இனிமேல் தனது வயலை நம்பிக்கொண்டிந்த விவசாயி பன்னாட்டு நிறுவனங்களிடம் கையேந்தி நிற்க வேண்டிய நிலை வரும். எனவே இவ்வபாயம் குறத்து சிந்திக்க, விவாதிக்க நடைமுறைப்படுத்த இந்நூலை வெளியிடுகிறோம். ரூ.70/-
வளர்ப்பும் தொழில்நுட்பமும்,பயன்களும் பேராசிரியர். சுல்தான் அஹமது இஸ்மாயில் மண்புழு தான் நிறைய பாரம்பரிய விஞ்ஞானிகள், துறவிகள், கவிஞர்களின் விருப்பத்துக்குரிய விவாதப்பொருளாகவும் புகழ்ச்சிக்குரிய உயிரியாகவும் இருந்திருக்கிறது. எந்த வகையான கடுமையான மண்ணையும் ஊடுருவக் கூடியவை என்று மனோன்மணியம் சுந்தரனார் வியந்திருக்கிறார். பூமியின் குடல்கள் என்று அரிஸ்டாட்டிலும் இயற்கையின் உழவன் என்று சார்லஸ் டார்வினும் புகழ்ந்திருக்கிறார்கள். ரூ.70/-
மசானபு ஃபுகோகா தமிழில் :பூவுலகின் நணபர்கள் புதிதாய் வருபவர்கள் இயற்கை வேளாண்மை என்பதற்கு இயற்கையானது… ரூ.130/-
இயற்கை வழியில் வேளாண்மை பசுமைத் தத்துவத்தின் கோட்பாடு மற்றும் செயல்முறை மசானபு ஃபுகோகா இந்தப் புத்தகமானது, ஐம்பது வருடங்களாக இயற்கையைத் தேடி அலைந்த ஒரு விவசாயியின் பதிவாகும்.செலவு பிடிக்கும் செயற்கை உரங்கள் இல்லாமல், உழவு இயந்திரத்தின் தேவை இல்லாமல் விளங்கும் ஃபுகோகாவின் முறைகளும், கொள்கைகளும் சிறிய அளவிலான நிலம் வைத்திருக்கும் குறுவிவசாயிகளுக்கும் கூட கை கொடுக்கவல்லது. ரூ.500/-
ஆசிரியர்: ஸ்நேகிதன் நேரம் காடடுகிறது கடிகாரம் ஒரு பறவை பறந்து போகிறது அக்கணத்தில் வேறொன்றுமில்லை ரூ.35/-
மஜித் முன்னெச்சரிக்கையாய் யுத்தத்துக்கு சொற்கள் புறப்பட்டுச் சென்றுவிட்டன. அவர்களின் கொலைவெறிக்கு முன்பாக ஆக்கிரமிப்புக்கு முன்பாக கொடூரங்களுக்கு முன்பாக அச்சுறுத்தலாக வெடிக்கத்தொடங்கிவிட்டன. ரூ.150/-
ஆசிரியர்: ராஜ்குமார் ஸ்தபதி மண் மக்கள் மொழி மானம் மயிறு எல்லாம் இழந்து சொரனையற்று தோல் தடித்து இனாம் இலவசத்திற்காக உங்களுக்கு முன் வரிசையில் நிற்கையில் எழுதிய கவிதைகள் ரூ.50/-
ஆசிரியர்: மயூரா ரத்தினசாமி எநதப்பயணத்திலும் உடன் வருவதல்லை என்வீட்டுமரம் சாலையோர மரங்களை துணைக்கு அனுப்புகிறது தன்னை நினைவூட்ட… ரூ.40/-
யாழன் ஆதி தம்மபதம் புத்தரின் போதனைகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. திரிபீடகங்களாகத் தொகுக்கப்பட்ட புத்தரின் போதனைகளில் தம்மபதம் சுத்தபீடகத்தில் குந்தக நிகாயத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. மனித வாழ்க்கைக்குத் தேவையான அறத்தை மிக எளிமையாகவும் நேர்த்தியானக் கவிதை வடிவத்திலும் பாலி மொழியில் இருக்கும் தம்மபதம் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழிலும் பல மொழிபெயர்ப்புகள் வந்திருக்கின்றன. ஆனால் கவிதை வடிவத்தில் தம்மபதம் மிக எளிமையாகவும் வாசிப்போருக்கு இன்பம் பயப்பதாகவும் அமைந்திருப்பது இந்த மொழிபெயர்ப்பின் சிறப்பு எனக் கூறலாம். ரூ.130/-
காலவேக மதயானை குட்டி ரேவதி கவிதைகள் ரூ.100/-