தமிழில் அறிவியல் புனைகதைகள் அருகி வருகின்றன. எழுத்தாளர் சுஜாதாவுக்குப் பிறகு ஏறத்தாழ அறிவியல் புனைகதையில் தேக்கநிலை. ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளிவந்த ஆபரேஷன் நோவா தொடர் பெரும் வாசக வரவேற்பைப் பெற்றது. டோபா எரிமலை வெடித்து பூமிக்கு மிகப்பெரிய ஆபத்து நேரப் போவதை விஞ்ஞானிகள் அறிகிறார்கள். மக்களைக் காப்பாற்றும் பணியில் பல சிக்கல்கள். உயிரினம் வாழ உகந்த கோள் ஒன்றில் மனிதர்கள் வாழ வழிசெய்யப்படுகிறது. இந்த நேரத்தில் பூமிக்கு ஆபத்து இல்லை எனத் தெரியவர, சயின்டிஸ்ட் ஒருவர் சாத்தான் உருவம் எடுக்கிறார். விறுவிறுப்பான் கதை. எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் அணிந்துரை, நாவலுக்கு மகுடம் சூட்டியிருக்கிறது.
ரூ.160/-
No Comments